TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Saturday 28 January 2012

தமுமுக-மமக வின் மாநில பொதுக்குழு

தமுமுக-மமக வின் மாநில செயற்குழு நேற்று நடைபெற்று முடிந்ததை அடுத்து, இன்று காலை தாம்பரம் அருகே உள்ள மேடவாக்கம் காயிதே மில்லத் கல்லூரியில் தொடங்கியதமுமுக- மமக வின் பொதுக்குழு

Friday 27 January 2012

ரியாத்-- தமுமுக மத்திய மண்டலத்திற்க்குட்பட்ட நஸீம் கிளையின் மாதந்திர பொதுக்கூட்டம்



 
ரியாத்-- தமுமுக மத்திய மண்டலத்திற்க்குட்பட்ட நஸீம் கிளையின் மாதந்திர பொதுக்கூட்டம் 26-01-2012 வியாழன் அன்று இரவு 8 மணிக்கு மத்திய மண்டல தமுமுக தஃவா பிரிவு பொறுப்பாளர் சகோதரர் அலி உஸ்மான் அவர்கள் தலமையில்

குடியரசு தினத்தை முன்னிட்டு 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம்




 R.K. நகர தமுமுக சார்பாக நடைபெற்ற இரத்ததான முகாம்
குடியரசு தினத்தை முன்னிட்டு வட சென்னை சார்பாக 8 பகுதிகளில் மருத்துவ மற்றும் இரத்த தான முகாம் நடைபெற்றது. இதில் மாநில பொதுசெயலாளர் செ. ஹைதர் அலி, மாநில செயலாளர் P.S. ஹமீது மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இன்று கூடியது மாநில செயற்குழு


மாநில செயற்குழு
தமுமுக- மமக வின் மாநில நிர்வாகக்குழு இன்று காலை 10 மணிக்கு தாம்பரத்தில் நடைபெற்றது. தொடர்ந்து 11 மணி அளவில் தலைமை செயற்குழு தொடங்கியது. இந்த செயற்குழுவில் தமிழகம் முழுவதும் உள்ள தமுமுக - மமக

கோவை பள்ளிவாசல் மீது கல்வீச்சு தமுமுக மாவட்ட துணைத்தலைவர் கார் கண்ணாடியையும் கல்லால் தாக்கி உடைப்பு பதட்டம்


கோவை குனியமுத்தூர் மூவேந்தர் நகர் பகுதியில் தாஜீல் இஸ்லாம் ஹனிபி சுன்னத் ஜமாத் கிளை பள்ளிவாசல் உள்ளது.
நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் பள்ளிவாசல் முன்புறம் உள்ள ஜன்னல் கண்ணாடியை கல்வீசி தாக்கினர். பள்ளிவாசலில் தங்கியிருந்த மோதினார் நூர்முகமது சத்தம் கேட்டு எழுந்து பார்த்தபோது சிலர் அங்கிருந்து ஒடியுள்ளனர். 

Thursday 26 January 2012

த.மு.மு.க திருவிதாங் கோடு


த.மு.மு.க திருவிதாங் கோடு கிளை பொதுக்குழு கிளை செயலாளர் ஷேக் தலைமையில் நடைபெற்றது இதில் உறுபினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.கிளையின் கடந்தகால ,மற்றும் எதிர்கால செயல்பாடுகள் குறித்து அலோசனை செய்யப்பட்டது

ஹிஜ்ரி ஆண்டின் மூன்றாம் மாதமான ரபீவுல் அவ்வல் ஓர் ரம்மியமான மாதமாகும்.


ரபீவுல் அவ்வல் என்றால் முதல் வசந்தம் என்று பொருள். இது வசந்தகாலத்தின் துவக்கமாக இருப்பதால் இப்பெயர் வந்திருக்கலாம்.
ரபீவுல் அவ்வல் மாதம் வந்தாலே முஸ்லிம்களில் சிலருக்கு பெரும் மகிழ்ச்சியும் சந்தோசமும் வந்துவிடும். காரணம் இது நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதம். ஆகவே இந்த மாதத்தை கொண்டாடும் மாதமாக எடுத்துக் கொள்வது நபி(ஸல்)

Wednesday 25 January 2012

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி:


மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேரா. எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. வெளியிடும் குடியரசு தின வாழ்த்துச் செய்தி:
குடியரசு தின வாழ்த்துக்களை நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நமது நாட்டின் அரசியல் நிர்ணயச் சட்டம் நடைமுறைக்கு வந்ததைக் கொண்டாடும் தினமாக ஆண்டுதோறும் குடியரசு தினத்தை நாம் கொண்டாடி வருகிறோம்.

வடகரை தமுமுக


வடகரை தமுமுக,மமக கிளையின் கூட்டம் தமுமுக கிளை 

அலுவலகத்தில் நடைப்பெற்றது அதில் கீழ் கண்ட சகோதரர்கள் புதிய 

நிர்வாகிகளாக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டனர்

Tuesday 24 January 2012

தொடர் வண்டியில் பயனித்து மாருடைப்பு எற்பட்டு இறந்துபோனவர் உடல்லை மிட்பு-தமுமுக

19/01/2011 அன்று காலை 7:30 மணி அளவில் மயிலாடுதுறை வழியாக செல்லும் ராமேஸ்வரம் எக்ஸ்பர்ஸ் தொடர் வண்டி ராமேஸ்வரத்திலேர்ந்து வந்து கொன்டு இருந்தது.அதில் பயனித்த கிளக்கரை சார்ந்த குடும்பம் ஒன்று சென்னை நொக்கி பயனித்தார்கள்.ஒரு வயதான

Monday 23 January 2012

மதரசா மாணவர்களுக்கு திருக்குர்ஆன் - பேராசிரியர் ஜவாஹிருல்லா வழங்கினார்


இராமநாதபுரம் (கி) மாவட்டம் ஆற்றங்கரையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பள்ளிவாசலில் இயங்கும் மத்ரசாவின் மாணவர்களுக்கு திருக்குர்ஆன் வழங்கப்பட்ட்து. இதனை பேராசிரியர் ஜவாஹிருல்லா வழங்கினார்.
மதரசா மாணவர்களுக்கு திருக்குர்ஆன்

லால்பேட்டை தமுமுகவின் ஆம்புலன்ஸ் சேவை.


லால்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக கடந்த 5ஆண்டுகளாக அனைத்து சமுதாய மக்களின் தேவைகளையும் தமுமுக வின் ஆம்புலன்ஸ் பூர்த்தி செய்துவருகிறது. சாலை விபத்துகளிலும், மழைகாலங்களிலும் தமுமுக ஆம்புலன்ஸ் மற்றும் அதன் தொண்டர்கள் செய்துவரும் களப்பணிகள் அணைத்து சமுதாய மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருவதோடு மட்டுமல்லாமல் அனைத்துக் கட்சிகள், டாக்டர்கள் மற்றும் பொதுமக்கள் வியந்து பாராட்டும் அளவுக்கு தனது சேவைகளை தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறது.{அல்ஹம்துலில்லாஹ்} 
சில நாட்களுக்கு முன்பு பாண்டிசேரி மருத்துவமனைக்கு சென்று திரும்பும் வழியில் லால்பேட்டை ஆம்புலன்ஸ்  விபத்தில் சிக்கி வாகனம் சேதம் அடைந்தது மேலும் இந்த வாகனம் வாங்கி 5 வருடங்கள் ஆகிவிட்டதால் ஆம்புலன்ஸை மாற்றி புதிய ஆம்புலன்ஸ் வாங்க நகர நிர்வாகத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது .

  லால்பேட்டை த.மு.மு.க. .சகோதரர்களே ஆம்புலன்ஸ் சேவைகள் தொய்வின்றி தொடர உங்களது நன்கொடைகளை எங்களுக்கு அனுப்பி தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

தொடர்புக்கு.... 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்,  
லால்பேட்டை நகரம். 
தலைவர் :முஹமது ஹாரிஸ் ,பொருளாளர் :A.இர்பானுல்லாஹ். BE

மமக ஆர்ப்பாட்டம்--டாஸ்மாக் கடையை அகற்ற கோரி

மேலப்பாளையம், ரெட்டியார்பட்டி ரோடு, ராஜாநகரில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக் கோரி மேலப்பாளையம் சந்தைமுக்கில் மமக.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.ஆர்ப்பாட்டத்திற்கு 

 


மமக., மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன் தலைமை வகித்தார். மேலப்பாளையம் பகுதி

மத்திய மண்டல தமுமுக--தலமையகம் ரியாத்


19/01/2011 வியாழன் அன்று இஷாவுக்கு பிறகு ரியாத் மாநகரில் பத்தாஹ் அல் ரொஸைஸ் கட்டிடத்தில்
உள்ள தமுமுக மத்திய மண்டல தலமையகத்தில் மண்டல கிளைகளின் மாதாந்திர
கூட்டம் மண்டல பொதுச்செயலாளர் சகோதரர் ஹிசைன் கனி அவர்களின் தலமையில் நடைப் பெற்றது.





இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டு கிளைகளின் கடந்த கால செயற்பாடுகள்
இன்ஷா அல்லாஹ் எதிர்கால பணிகள் குறித்தும் விரிவாக எடுத்து உரைத்தார்கள்,
மேலும் மண்டலத்தின் செயற்பாடுகள்,பணிகள்,

Saturday 21 January 2012

அனைத்து இயக்க தலைவர்களும் ஒன்றாக கலந்து கொண்ட ஜாக்கின் தவ்ஹீத் மாநாடு!


எந்த விதமான வேறுபாடு இல்லாமலும் காழ்ப்புணர்வுகள்  ஏதுமின்றி  நம் இஸ்லாமிய இயக்க தலைவர்கள் அனைவரும்கடந்த ஜனவரி 14,15,ம் தேதிகளில்  JAQH நடத்திய படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி என்ற மாநில மாநாட்டில் கலந்து கொண்டனர். 
இந்த மாநாட்டில்..
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின்  மாநில அமைப்பாளர் குணங்குடி ஹனிஃபா, பொருளாளர் ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர்  S.M..பாக்கர், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலசெயலாளர் கோவை ஜாபர்,  S.D.P.I யை சேர்ந்த மாநில நிர்வாகிகளும் மற்றும் அனைத்து சுன்னத் வல் ஜமாத்தார்களும் இந்த மாநில மாநாட்டில் கலந்து கொண்டது இயக்கங்கள் வேறுபட்டாலும் எங்களுடைய ஈமான் வேறுபடவில்லை என்று பறைசாற்றியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.  

உம்மன்சாண்டிக்கு கறுப்புக்கொடி: முஸ்லிம்கள் கைது Read more about உம்மன்சாண்டிக்கு கறுப்புக்கொடி: முஸ்லிம்கள் கைது

கோழிக்கோட்டில் கேரள முதல்  அமைச்சரின் காரை சுற்றி வளைத்து அவருக்கு கறுப்புக்கொடி காண்பித்த முஸ்லிம்கள் நேற்று கைது செய்யப்பட்டனர். 

கேரள முதல் அமைச்சர் உம்மன் சாண்டி பள்ளிக்கூட விழாவில் கலந்துக் கொள்வதற்காக நேற்று கோழிக்கோடு சென்றார்.

விழா முடிவடைந்த பின்னர் தனது காரில் ஏற வந்த போது, முஸ்லிம் அமைப்பு ஒன்றினை சேர்ந்த 12 பேர், கேரளாவில் முஸ்லிம்கள் மீது காவல்துறையினர் அடக்குமுறையினை கையாள்வதாகவும், பல்வேறு பொய் வழக்குகளை வேண்டுமென்றே பதிவு செய்து முஸ்லிம்களை இன்னலுக்குள்ளாக்கின்றனர் என்றும் குற்றஞ்சாட்டி, முதல் அமைச்சர் உம்மன் சாண்டிக்கு எதிராக கோஷம் எழுப்பி, கறுப்பு கொடியை ஏந்தியவாறு காரை முற்றுகையிட்டனர்.

உடனடியாக காவல் துறையினர் கறுப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்டோரை கைது செய்தனர். முதல் அமைச்சரின் காரை சுற்றி வளைத்து அவருக்கு கறுப்புக்கொடி காண்பித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது


thanks  www.inneram.com

Thursday 19 January 2012

ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள்: முக்கியத்துவமாகும் ஜோஷியின் கொலை


RSS Sunil_Joshi
மும்பை:மலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய குண்டுவெடிப்புகளை குறித்து விசாரணை நடத்திவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)க்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில்ஜோஷியின் கொலை வழக்கு விசாரணை முக்கியத்துவமாக மாறும்.
சுனில் ஜோஷியின் கொலை வழக்கில் ஆதாரங்கள் இதர வழக்குகளுடன் பிணைந்து கிடப்பதால் இவ்வழக்கின் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

பிரிட்டனில் ஷரியத் சட்ட நீதிமுறை- பெட்டகம்

பிரிட்டனில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் குடும்பத் தகறாறுகள், பணக் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் வியாபாரப் பிரச்சனைகளுடன் தொடர்புடைய வழக்குகளின்போது ஷரியா கவுன்சில்களூடாக தீர்வு பெற்றுக் கொள்கிறார்கள்.
பிரச்சனைகளை விரைவாகவும் சிக்கனமாகவும் தீர்த்துக்கொள்ள முடிவதால் முஸ்லிம்களுடனான வழக்குகளின் போது முஸ்லிம்கள் அல்லாதவர்களும் ஷரியா அமைப்புகளை பெருமளவில் நாடுவதாக கூறப்படுகின்றது.
1982ம் ஆண்டில் இருந்து ஷரியா கவுன்சில் முறை இயங்கிவரும் பிரிட்டனில் கிட்டத்தட்ட 85 ஷரியா நீதிமன்றங்கள் இருப்பதாக மதிப்பிடப்படுகின்றது.
ஷரியா இஸ்லாமிய சட்டங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் அறிஞர்கள் வழக்குகளுக்கு இங்கு தீர்ப்பு வழங்குகின்றனர்.

Tuesday 17 January 2012

காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்


காணாமல் போயிருந்த வரலாற்றுக் கதாபாத்திரங்கள்
இந்திய இசுலாமியர்கள் அந்நியப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக சில அமைப்புகள் அயராமல் உழைத்துக் கொண்டு இருக்கின்றன. இசுலாமியர்கள் அந்நிய நாட்டில் இருந்து வந்தவர்கள், வெளியேற்றப்பட வேண்டியவர்கள் போன்ற துவேச பிரச்சாரத்தை நீண்ட நாட்களாக இந்த அமைப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன. இந்த பிரச்சாரத்தின் விளைவாக இந்தியாவில் ஆயிரக் கணக்கான உயிர்களை பழி வாங்கிய மதக்கலவரங்களும், மதமோதல்களும் அரங்கேற்றப்பட்டுள்ளன. இந்தப் பொய்பிரச்சாரம் இந்தியாவின் அமைதியை நிலை குலைய செய்த வேளையில் இந்திய சமய சார்பின்மையையும் கேள்வி குறியாக மாற்றியுள்ளது.
இந்த மதவாத பிரச்சாரத்திற்கு சாதகமாக இசுலாமியர்கள் இந்திய நாட்டை கட்டமைப்பதற்கு இயற்றிய தொண்டினை திட்டமிட்டு திரைக்கு பின்னால்

Monday 16 January 2012

பிரபல பாடகர் ஜோஸ் கெமிலன் புனித இஸ்லாத்தை ஏற்றார்


 
ஆப்ரிக்காவிலும் உலகம் முழுவதிலும் தனது இசையால் பலரை கொள்ளைக் கொண்ட ஜோஸ் கெமிலன் ஜாஃபர் கடாபியாக தனது வாழ்வை மாற்றியுள்ளார். 

எல்லாப் புகழும் இறைவனுக்கே !

ஆம்.. வழக்கமாக இசைத் துறையில் மற்றுமொரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. ஆனால் இவரது இந்த முடிவை இவரது மனைவி டேனிலா விரும்பவில்லை. கிருத்தவத்தை விட்டு இஸ்லாத்தை தேர்ந்தெடுத்த இவரோடு தன்னால் வாழ முடியாது என்று விவாகரத்து கேட்டு கோர்ட்டை நாடியிருக்கிறார்.

'நான் டேனிலாவோடு சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன். எனவே தான் ஐந்து வேளை தொழுகைக்கு பள்ளிக்கு செல்லாமல் வெள்ளிக் கிழமை மட்டுமே தொழுகைக்கு சென்றேன். இருந்தும் என் மனைவி என்னை புரிந்து கொள்ளவில்லை. தொழுகை ஒரு மனிதனுக்கு அமைதியை கொடுக்கிறது. நேர்வழியை காட்டுகிறது. இது நாள்வரை அமைதியிழந்த எனக்கு தொழுகை மூலம் அமைதி கிட்டுகிறது. இதனை எனது மனைவிக்கு புரிய வைக்க முயற்ச்சிப்பேன்' என்கிறார் ஜாஃபர் கடாபி!

இவரது முடிவை மாற்றிக் கொள்ள சொல்லி பல இடங்களில் இருந்தும் அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் இவரோ எவரது பேச்சையும கேட்பதாக இல்லை. 

'என் குடும்பத்துக்காக நான் எந்த தியாகமும் செய்ய தயாராக உள்ளேன். எனது தொழில், எனது மனைவி, எனது பெற்றோர் அனைவரையும் நான் இன்றும் நேசிக்கிறேன். எவரையும் இழக்க நான் விரும்பவில்லை. ஆனால் எனது தந்தையோ ' ஜோஸப் மயாஞ்சோவாக வந்து என்னிடம் பேசு ஒரு முஸ்லிமாக ஜாஃபர் கடாபியாக என்னிடம் வராதே!' என்று கூறி விட்டார். இது எனக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது. எனது முடிவால் எவருக்கும் மனது புண்பட்டிருந்தால் அதற்காக நான் வருந்துகிறேன்' என்கிறார் ஜாஃபர் கடாபி.

சுவனப்பிரியனான நானோ என்னைப் போன்ற பல தலைமுறைகளாக முஸ்லிம்களாக வாழ்ந்து வருபவர்களோ இது போன்ற பிரச்னைகளை சந்தித்ததில்லை. ஏனெனில் வழி வழியாக வெகு சுலபமாக எங்களுக்கு இந்த இஸ்லாம் கிடைத்து விட்டது. ஆனால் புதிதாக இஸ்லாத்தை ஏற்கும் இவரைப் பொன்றவர்கள் அனுபவிக்கும் பிரச்னைகளை நாம் சாதாரணமாக எண்ணிவிட முடியாது. எனவேதான் எங்களைவிட ஜாஃபர் கடாபி போன்றவர்கள் இறைவனுக்கு மிக நெருக்கமாகி விடுகிறார்கள். 

இசையால்தான் மனிதனின் மனதை ஒருமித்து அமைதியாக்க முடியும் என்பதனை இது போன்ற இசைக் கலைஞர்கள் தொடர்ந்து இஸ்லாத்தை ஏற்பதன் மூலம் பொய்ப்பிக்கப் படுகிறது. யூசுஃப் இஸ்லாம், ஏ.ஆர். ரஹ்மான், மைக்கேல் ஜாக்ஸன், ஜெராமைக் ஜாக்ஸன், ஜோஸப் மயாஞ்ஜோ என்று உலகில் இஸ்லாத்தினை ஏற்போரின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. புகழின் உச்சியில் இரக்கும் ஒருவன் தனது புகழுக்கு காரணமான இசையை வெறுக்கும் இஸ்லாத்தை ஏற்பது நமக்கு முரணாக தெரிகிறது அல்லவா!
thanks to yarlmuslim

லால்பேட்டை மக்களின் நீண்டநாள் கனவு நிறைவேறியது

       லால்பேட்டை நகரில் புதிய பேருந்து நிலையம் 

Sunday 15 January 2012

இஸ்லாத்தை ஏற்ற நேபாள நடிகை பூஜா லாமா !


அல்ஹம்துலில்லாஹ் ..!!!



நேபாளத்தின் புகழ்பெற்ற நடிகையும்,பாடகருமான "பூஜா லாமா" ஐந்து மாதங்களுக்கு முன்பு இஸ்லாத்தை தழுவினார் அல்ஹம்துலில்லாஹ்.இவருடைய வயது 28 என்பதும் இவர் புத்த குடும்பத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் தனது துபாய் கத்தார் பயணத்தை முடித்து விட்டு திரும்பும்போது காத்மாண்டு என்ற இடத்தில இஸ்லாத்தை தழுவினார்.


பேட்டி ஒன்றில், இஸ்லாத்தை தழுவிய பிறகு பூஜா லாமா என்ற தனது பெயரை "ஆம்னா ஃபாரூகி" என்று மாற்றிக் கொண்டதாக கூறினார்.மேலும்"இஸ்லாம் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் மனித நேயத்தின் அடிப்படையில் தீர்வு அளிக்கிறது.இஸ்லாத்தின் அழகு தனக்கு நேர் வழி காண்பித்தது இல்லையெனில் நான் இருளிலேயே இருந்திருப்பேன்.இஸ்லாம் அமைதியான மதம் என்பதை நான் உலகுக்கு கூற விரும்புகிறேன்."

தானே புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாரி வழங்குங்கள்


தானே புயல் தமிழகத்தில் கடலூர் மாவட்டம் முழுவதும், புதுச்சேரி, விழுப்புரம் மற்றும் நாகை மாவட்டத்தின் சில பகுதிகளில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. உயிர் சேதம் அதிகம் இல்லாவிட்டாலும் உயிர் தப்பிய மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை முற்றிலும் இழந்து நிர்கதியாக நிற்கிறார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு 
Thane_Cyclone_Help

Friday 13 January 2012

தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம் அதிகரிப்பு


தமிழக ஹஜ் பயணிகள் ஒதுக்கீடு 11 சதவீதம்அதிகரிக்கப்பட்டு என்றும், ஹஜ் பயணம் செல்வோருக்கு மார்ச் 1-ந் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என்றும் இந்திய ஹஜ் கமிட்டி அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ஹஜ் கமிட்டியின் துணைத்தலைவர் பிரசிடென்ட் ஏ.அபூபக்கர் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
விண்ணப்பம் எப்போது?
ஹஜ் பயணம் பற்றிய அறிவிப்பு அடுத்த மாதம் (பிப்ரவரி) கடைசி வாரத்தில் வெளியிடப்படும். ஹஜ் பயணம் செல்வதற்கான விண்ணப்ப படிவங்கள் மார்ச் 1-ந் தேதி முதல் வழங்கப்படும். விண்ணப்பம் பெற

Thursday 12 January 2012

ஊத்தங்கரை காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம்



வரலாற்றுப் பெருமை மிக்க நமது லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் புதிய நிர்வாகிகள் தேர்வு !




வரலாற்றுப்  பெருமை மிக்க நமது லால்பேட்டை ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக்கல்லூரியின் புதிய உறுப்பினர்களின் கூட்டம் இன்று காலை (12.01.2012) ஜாமிஆ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்

தலைவராக ஹாஜி பி.எம்.முஹம்மதுஆதம் அவர்கள் செயலாளராக ஹாஜி.பி.எம்.முஹம்மது எஹ்யா, அவர்கள்  
பொருளாளராக  ஹாஜி.எஸ்.ஜாபர்அலி அவர்கள்  
ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டனர். 


Wednesday 11 January 2012

புத்தகத் திருவிழாவிற்கு புறப்படுங்கள்...




ஒரு தேசத்தில் புரட்சியை உருவாக்க வேண்டுமெனில் முதலில் ஆயுதங்களை அல்ல; புத்தகங்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

வீரத்தைத் தட்டியெழுப்புவதற்கு முன்பு அறிவையும், அதுகுறித்த சிந்தனைகளையும் தூண்ட வேண்டும். அதற்கு புத்தகங்கள் வழிகாட்டுகின்றன.

ஆயுதப் புரட்சிகளையும், மக்கள் கிளர்ச்சிகளையும் காகிதப் புரட்சிகள் வழிநடத்தியிருக்கின்றன என்பதை உலக வரலாறுகள் நிரூபித்துள்ளன.

தமிழகத் தலைநகர் சென்னையில் கடந்த 34 வருடங்களாக அறிவொளியைப் பரப்பும் அறப்பணியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (ஙிகிறிகிஷிமி) சிறப்பாக செய்து வருகின்றன.

இவ்வருடம் வெற்றிகரமாக 35வது ஆண்டில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடக்கவிருக்கிறது.

ஜனவரி 5 முதல் 17 வரை தினமும் மதியம் 2 மணி முதல் 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் 9 மணி வரையும் புத்தகத் திருவிழா நடக்க உள்ளது.

அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், அறிவுஜீவிகள், ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே வருகையாளர்களாயிருந்த இத்திருவிழா, கடந்த 10 வருடங்களாக அடித்தட்டு மக்களும் வருகைதரும் முக்கிய வருடாந்திர நிகழ்வாக மாறியிருக்கிறது.

"வாசிக்கும் தலைமுறையையும், யோசிக்கும் தலைவர்களையும் இப்புத்தகத் திருவிழா உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையில்லை. பலர் குடும்பத்துடன் வருகைதரும் ஷாப்பிங் நிகழ்வு போல மாறியிருக்கும் இத்திருவிழாவில் அனைத்துத் துறை நூல்களும், தரமான ஆங்கில வெளியீடுகளும் கிடைக்கின்றன.

அரசியல், இலக்கியம், வரலாறு, தத்துவம், ஆன்மீகம் மட்டுமின்றி மாணவர்களுக்குத் தேவையான பல்துறை நூல்களும் கிடைக்கின்றன.

புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்கள் குறைந்தது இரண்டு நாட்களை ஒதுக்க வேண்டும். முதல் நாள் சென்று புத்தகக் கடைகளையும், அங்குள்ள புத்தகங்களையும் குறித்துக் கொண்டு, அதன் விலைகளையும் அறிய வேண்டும். அடுத்த நாள் சென்று வாங்க வேண்டும். இதன்மூலம் பரபரப்பு தவிர்க்கப்பட்டு, நாம் விரும்பும் புத்தகங்களை நிதானமாக வாங்க முடியும். குறைந்தது 500 ரூபாயில் தொடங்கி 5000 ரூபாய் வரை புத்தகங்களை வாங்குபவர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தமுமுக மற்றும் மமகவைச் சேர்ந்த சகோதரர்கள் இப்புத்தகத் திருவிழாவிற்கு வருகைதந்து தங்களின் வாசிக்கும் அறிவை உயர்த்திக் கொள்ள வேண்டும். மேடைகளில் பேசவும், பயிலரங்குகளில் கருத்துரை வழங்கவும், கட்டுரைகள் எழுதவும் புத்தக வாசிப்பு மிகவும் முக்கியமாகும்.

அந்த வகையில் 600க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள் இருக்கும் நிலையில் உங்களின் அலைச்சலையும், தேடலையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் ஒருசில புத்தக நிறுவனங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

அங்கு சென்று உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ற புத்தகங்களை நீங்கள் வாங்கலாம். அதேநேரம், நாம் சுட்டிக்காட்டியுள்ள சில கடைகளில் நமக்கு எதிரான புத்தகங்களும் இருக்கக்கூடும். அவற்றை கவனமுடன் தவிர்ப்பது உங்களது கடமையாகும். இவை தவிர விகடன் குழுமம், நக்கீரன், கிழக்கு பதிப்பகம், அம்பேத்கார் நிலையங்கள் என மேலும் பல பதிப்பகங்களும் உள்ளன. அங்கெல்லாம் புத்தகங்களைத் தேர்வு செய்வது உங்களின் கவனத்துடன் கூடிய கடமையாகும்.

1. பாரதி புத்தகாலயம் (F18)
2. அலைகள் (22)
3. பெரியார் சுயமரியாதை (38)
4. ரஹ்மத் பதிப்பகம் (39)
5. NCBH (F53)
6. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (F54)
7. பூவுலகின் நண்பர்கள் (71)
8. தாழையான் பதிப்பகம் (88)
9. சாஜிதா புக் சென்டர் (124)
10. யூனிவர்சல் பப்ளிஷர்ஸ் (168)
11. பீப்புல்ஸ் வாட்ச் (187)
12. எதிர் (221)
13. விடியல் (306)
14. அடையாளம் (322)
15. பொன்னி (387)
16. முரண் (393)
17. பாவை (402)
18. கீழைக்காற்று (404)
19. கறுப்புப் பிரதிகள் (413)
20. இளையான்குடியான் மடல் (436)
21. புலம் (447)

thanks:  Thamimun Ansari

சேலம் மமக வணிகரணி சார்பில் கல்வி உதவி


சேலம் மமக வணிகரணி சார்பில் அதன் மாவட்ட வணிகரணி செயலாளர் S.மீராசாஹிப் ருபாய் 5000 தொகையை 
 சேலம் மமக வணிகரணி சார்பில் கல்வி உதவி
 

Tuesday 10 January 2012

"தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்


தானே புயலால் ஏற்பட்ட சேதங்களை பார்வையிடவும் நிவாராண பணிகளை மேற்க்கொள்ள தமுமுக தலைவர் பேரா எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையிலான குழு 09.1.2011 அன்று விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் ஆகிய பகுதிகளுக்கு சென்றது. இக்குழுவில் மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் ப. அப்துல் சமது, தமுமுக துணைச் செயலாளர் எஸ்.எம். ஜின்னா, தோழமை இயக்கத்தின் இயக்குனர் தேவநேயன் ஆகியோர் இருந்தனர்.
சுனாமி தாக்குதலுக்கு பின் மிகப் பெரிய "தானே" பாதித்த பகுதிகளில் தமுமுக மற்றும் மமக நிர்வாகிகள்
 இழப்பை கடலோர கிராமங்கள் சந்திருந்தது என்பது அனைவராலும் உணர முடிந்தது. ஆழமான வேர்களுக்கு வாழ்ந்து வந்த மரங்கள்

தானே புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் தமுமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது


 தானே புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் 

கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பாதிக்கப்பட்ட 
அவுலியா நகர்,முஸ்லீம் ஒற்றவாடை தெரு,நீயு காலனி,ஷரீஃபியா 
நகர்,மீரான் பள்ளி,நூர் முஹம்மது நகர்,மற்றும் ஜீவா நகர், திடீர் குப்பம்,திருக்குளம் 

உள்ளிட்ட இடங்களுக்கு 09/01/2012 அன்று தமுமுக மாநில தலைவர்
 

Monday 9 January 2012

தானே புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டையில் தமுமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது


கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையும், பாண்டிச்சேரியையும் கடுமையாகத் தாக்கிய தானே புயல் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களும் கடுமையான சேதத்திற்கு உள்ளாயின. கடும் சீற்றத்துடன் வீசிய காற்று அங்கிருந்த மக்களின் வீட்டுக்கூரைகளைப் பிய்த்து எறிந்தது.
காற்றின் வேகம் காரணமாக

வாணியம்பாடியில் தமுமுக மற்றும் மமக சார்பில் செயல்வீரல்கள் கூட்டம்


வாணியம்பாடியில் தமுமுக மற்றும் மமக சார்பில் செயல்வீரல்கள் கூட்டம்
 30/12/11 அன்று வாணியம்பாடியில் நகர தமுமுக மற்றும் மமக சார்பில் செயல்வீரல்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு

இளையான்குடியில் நடைபெற்ற "வென்று காட்டுவோம்" பயிற்சி முகாம்

வென்று காட்டுவோம்
அரசு தேர்வு எழுதும் 10வது மற்றும் 12வது வகுப்பு மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறவும், தேர்ச்சி விகிதம் அதிகரிக்கவும், ஆண்டுதோறும் "வென்று காட்டுவோம்" என்ற பயிற்சி முகாமினை பின் தங்கிய இளையான்குடி பகுதியில் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

ஆம்பூரில் உலமாக்களுக்கு விலையில்லா மிதிவண்டி


ஆம்பூரில் உலமாக்களுக்கு விலையில்லா மிதிவண்டி
கடந்த 24/12/11 அன்று உலமாக்களுக்கு விலையில்லா மிதிவண்டி தமிழக அரசின் சார்பில் ஆம்பூரில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மமக சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா தலைமை தாங்கினார்

ஏர்வாடியில் நலத்திட்ட உதவி மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம்


ஏர்வாடியில் தமுமுக மார்க்க பிரசார அணி சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா மற்றும் மார்க்க விளக்க பொதுக்கூட்டம் நடந்தது. ஏர்வாடி தமுமுக துணை தலைவர் கமால் தலைமை வகித்தார். மமக துணை செயலாளர் சேக்பீர் முஹம்மது வரவேற்றார்.

Sunday 8 January 2012

முஸ்லிம் தம்பதிகளை கொடுமைப்படுத்திய போலீஸ் அதிகாரிக்கு நோட்டீஸ்!


பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானியின் ஜனசேதனா யாத்திரை தமிழகத்தில் நடைபெறும் வழியில் பைப் வெடிக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வழக்கில் விசாரணையின் பெயரால் அப்பாவி முஸ்லிம் தம்பதியினரை கொடுமை படுத்திய புகாரில் போலீஸ் அதிகாரிக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவையில் J.A.Q.H மாநில மாநாடு



பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்தார் ஆம்பூர் MLA

பள்ளிக்கூடங்களை ஆய்வு செய்தார் ஆம்பூர் MLA
7/1/12 அன்று ஆம்பூர் தொகுதி மேல்சானாங்குப்பம் ஊராட்சியில் உள்ள அரசு நடுநிலை பள்ளியை ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ. அஸ்லம் பாஷா அவர்கள்

ஆம்பூர் தொகுதி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் MLA மக்கள் குறை கேட்டார்


ஆம்பூர் தொகுதி பேரணாம்பட்டு ஒன்றியத்தில் MLA மக்கள் குரை  கேட்டார்
07/01/12 அன்று பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் உள்ள மேல்சானாங்குப்பம், கொல்லகுப்பம்,வடசேரி, சின்னபள்ளிகுப்பம், தென்னம்பட்டு, மலையம்பட்டு, பாப்பனபள்ளி, உள்ளிட்ட 7 ஊராட்சிகளுக்கு சென்று ஆம்பூர் MLA அ.அஸ்லம் பாஷா அவர்கள்

Saturday 7 January 2012

ஒற்றுமையை நிலைநாட்ட ஜும்ஆ பள்ளியை பிரிக்காதீர் ஜாமிஆ முதல்வர் ஜும்ஆ குத்பா உறை…

NOORUL AMEENநமது லால்பேட்டையில் கால காலமாக அனைவரும் ஒரே ஜும்மா பள்ளியில் தொழுதுவந்தோம். ஆனால் இப்போது ஒரு சிலரின் தூண்டுதலினால் இன்று முபாரக் மஸ்ஜிதில் ஜும்மா தொழுகை நடைபெற தொடங்கியுள்ளது.
இது போன்ற முடிவு நமது ஊரின் ஒற்றுமை சீர்குலையும் நிலை உருவகிவிடும் இதை நமது ஊர் முக்கிய பிரமுகர்கள் ஒன்று சேர்ந்து இதர்க்கு தீர்வு கானவேன்டும் என தமது ஜும்மா பேருறையில் ஜாமிஆ முதல்வர் அல்லாமா முஃப்தி அல்ஹாஜ் நூருல் அமீன் ஹஜ்ரத் குத்பா உறையில் குறிப்பிடார்கள்
நன்றி :Lalpet.Net

மேலப்பாளையத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பனி நடைபெற்றது,

மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் K.S. ரசூல்மைதீன் தலமையில், மேலப்பாளையத்தில் தமுமுக மாணவரணி சார்பில் சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பனி நடைபெற்றது,இதில் மாணவரனியினர் சிறப்பான முறையில் பனியாற்றினார்கள்.

இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்பு

இந்திய கடலோர காவல் படையில் வேலை வாய்ப்புக்கான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
நேவிக்ஸ் (பொதுவேலை) Naviks (General duty):
கல்வித் தகுதி அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களுடன் பிளஸ் டூ-வில் 60% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

Friday 6 January 2012

ஈரோடு, கோவையில் சட்டப்பேரவை மதி்ப்பீட்டு குழு ஆய்வு பேரா எம்.எச். ஜவாஹிருல்லா பங்கேற்பு

ஆவின் பால் பண்னையில் பால் பொருட்கள் தயார் செய்வது தொடர்பான ஆய்வு

நெல்லை மேலப்பாளையம் சந்தை அருகே உள்ள மதுக்கடையை அகற்ற மனிதநேய மக்கள் கட்சி கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நெல்லை மேலப்பாளையம் சந்தை அருகே உள்ள மதுக்கடையை அகற்ற மனிதநேய மக்கள் கட்சி கலெக்டரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக மனித நேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட செயலாளர் ரசூல் மைதீன் மக்கள் குறை தீர்க்கும் நாளில் கலெக்டர் செல்வராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: நெல்லை மேலப்பாளையத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.

ஷார்ஜா த.மு.மு.க மர்கஸில்05/01/2012 வியாழன் அன்று நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சி


ஷார்ஜா த.மு.மு.க மர்கஸில்05/01/2012 வியாழன் அன்று நடைபெற்ற இஸ்லாமிய நிகழ்ச்சியில் சகோதரர் நாசர் அலி கான் அவர்கள் இறைவணுக்கு இரக்கம் உண்டா என்ற தலைப்பில் பேசினார்கள் இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் பங்கு பெற்று பயன் அடைந்தனர்

ஆம்பூர் நியாய விலை கடை ஊழியர்களை எச்சரித்த ஆம்பூர் MLA


ஆம்பூர்  நியாய விலை கடை ஊழியர்களை எச்சரித்த ஆம்பூர் MLA
காலை 10 மணி ஆகியும் நியாய விலை கடை திறக்க வில்லை, கடை ஊழியர்கள் எங்களிடம் தகாத வார்த்தைகளில் திட்டுகிறார்கள், பொருட்கன் எடை குறைவாக போடுகிறார்கள்போன்ற புகார்களோடு , தினந்தோறும் காலையில் ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் அ.அஸ்லம் பாஷா அவர்களுக்கு

Wednesday 4 January 2012

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மமக தலைவர்

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்
. இதில் தமுமுக மாநில துணை செயலாளர் S. காதர் மொய்தீன், கன்னியாகுமரி தமுமுக மற்றும் மமக பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

PhD பட்டம் பெற்றவருக்கு வாழ்த்து...


கடலூர் மாவட்டம் ஆயங்குடியை சேர்ந்த சகோ. மு.இ. முஹம்மது இர்ஷாத் (26), அணுமின் நிலையத்தால் கடல் வாழ் உயிரினம் பாதிக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து சென்னை பல்கலைகழகத்தில்  4-1-2012 அன்று தனது ஆய்வறிக்கையை சமர்ப்பித்துள்ளார். தற்போது சிங்கப்பூரில் உள்ள தேசிய பல்கலைகழகத்தில்ஆராய்ச்சியாளராக 

Tuesday 3 January 2012

மக்கள் குறை தீர்க்கும் முகாம் - சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது

மக்கள் குறை தீர்க்கும் முகாம் - சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது
இராமநாதபுரம் தொகுதிக்கு உட்பட்ட பொதுமக்களின் குறைகளை நீக்க, மக்கள் குறை தீர்க்கும் முகாம் சட்டமன்ற உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லா தலைமையில் நடைபெற்றது.

கன்னியாகுமரியில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் - பேரா. ஜவாஹிருல்லா கண்டன உரை

கன்னியாகுமரியில் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம்  - பேரா. ஜவாஹிருல்லா  கண்டன உரை

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக கன்னியாகுமரியில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லா கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்

முபாரக் மஸ்ஜித் 06.01.2012 முதல் லால்பேட்டையில் மூன்றாவது ஜும்மா மஸ்ஜித்...!

நான்காவது ஜும்மா மஸ்ஜித் எங்கே எப்போது...? லால்பேட்டை  ஒற்றுமையை  சீர்குலைக்க  நினைக்கும்  பெரியவர்கள்  போர்வைல்  சிலர் இதை  தடுக்க  இளைனரகள் ஒரு  அணியில்  திரள்வார்களா  இன்ஷா  அல்லாஹ்

Monday 2 January 2012

இந்த வாரம் ஷார்ஜா த.மு.மு.க மர்கஸில்


தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகிகள் தேர்தல் தக்கலை ராணி மஹாலில் நடைபெற்றது
.சிறப்பு விருந்தினராக மாநில செயலாளர் பி .எஸ் .ஹமீது அவர்கள் கலந்து கொண்டார் .கீழ் கண்ட நிர்வாகிகள் புதியதாக தேர்வு செய்யப்பட்டனர் .
A.அன்வர் சாதத் மாவட்ட தலைவர்

சவூதி அரேபியாவில் சிக்கிய தமிழக மீனவர்கள் தமுமுக துணையுடன் மீட்பு

மத்திய மண்டல தமுமுக-ரியாத் : இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம், பாம்பன் பகுதியைச் சேர்ந்த 16 பேர் கொண்ட மினவர்கள் சவூதி அரேபியா ஜிஸான் என்ற பகுதியில் மீன்பிடி பணிக்கு வந்துள்ளனர்

நெல்லையில் தமுமுக மாணவரணி நிகழ்ச்சி


பாஸ்போர்ட் பிரிவு மூடல் ம.ம.க., கண்டனம்

திருநெல்வேலி:நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இயங்கிய பாஸ்போர்ட் பிரிவு அலுவலகம் மூடப்பட்டதற்கு மனிதநேய மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்தது.
 
மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் ரசூல்மைதீன் அறிக்கை:தமிழகத்தில் அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் பாஸ்போர்ட் குறைதீர்க்கும் பிரிவு செயல்பட்டு வருகிறது. இப்பிரிவில் புதிய பாஸ்போர்ட் பெறுதல், புதுப்பித்தல், பெயர் சேர்த்தல், திருத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகள் நடக்கிறது. நெல்லை கலெக்டர் அலுவலகத்தில்

த.மு.மு.க மற்றும் மனித நேய மக்கள் கட்சி சேர்ந்தவர்கள் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி


தானே புயல் மழையால் பெரிதும் பாதிக்கப்பட்டு தொலைத்தொடர்புகள் பெரிதும் துண்டிக்கப்பட்டு, மின் கம்பங்கள் அறுந்து விழுந்து மின்சாரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டு ,பெரும்பாலான வீடுகள்,கடைகள் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள நெல்லிக்குப்பத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நகர தமுமுக வினர்

திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்

முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் மத்திய அரசின் பாரபட்சத்தையும், கேரள அரசின் தான்தோன்றித்தனத்தையும் கண்டித்து திருச்சியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் 1.1.2012 அன்று பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது துணை பொதுசெயலாளர் M. தமிமுன் அன்சாரி கண்டன உரையாற்றினார்.
த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar