லால்பேட்டையில் பைக்கா விளையாட்டு போட்டியை முருகு மாறன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
பைக்கா விளையாட்டு போட்டி
கடலூர் மாவட்டம் குமராட்சி ஊராட்சி ஒன்றிய அளவிலான பைக்கா விளை யாட்டு போட்டி லால்பேட்டை அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டியை காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற உறுப் பினர் முருகுமாறன் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
ஒன்றியக்குழு தலைவர்கள் பாண்டியன், மணிகண்டன், மாவட்ட ஊராட்சிக்குழு துணை தலைவர் ரேணுகா அசோகன், பேரூராட்சி மன்ற தலைவர் சபியுல்லா, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சந்திர காசு, பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித் தனர். முன்னதாக அனை வரை யும் தலைமை ஆசிரியர் மங்கையர்த் திலகம் வரவேற்று பேசினார். இதில் உதவி தலைமை ஆசி ரியர் ஆதித்தன், கல்விக் குழு உறுப்பினர் நஜீர்அகமது, செல்வம், வீரமணி, கோவிந்த ராஜன், உடற்கல்வி இயக்கு னர்கள் ராஜேந்திரன், சுப்பிர மணியன்,நாராயணன், என்.சி.சி.அலுவலர் ரமேஷ், நெய்வாசல் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் உள்பட ஆசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண் டனர்.
விலையில்லா சைக்கிள்
அதைதொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு விலை யில்லா சைக்கிளை முருகு மாறன் எம்.எல்.ஏ. வழங் கினார். முடிவில் உடற்கல்வி இயக்குனர் அன்புரோஸ் நன்றி கூறினார்.
http://www.lalpetexpress.com
http://www.lalpetexpress.com




No comments:
Post a Comment