வரலாற்றுச் சிறப்புமிக்க, ஆற்காடு நவாப் ஆட்சி புரிந்த நகரத்தில் பல கோடி ரூபாய் கோடி மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளன.
வக்ஃபு சொத்துகள் எண்ணும் ஒரு பெரும் புதையல் அரசின் அலட்சியத்தாலும், முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்த சில சுயநலமிகளாலும் இன்னும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த அரசியல்வாதிகளாலும் பணமுதலைகளாலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கொள்ளை அடிக்கப் பட்டுள்ளது. இதைக் கேட்க நாதியற்ற நிலையில் இந்த சமுதாயம் இருந்தது.