TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Friday, 27 November 2015

இந்தியாவின் கருப்பு நாள் டிசம்பர் 6


அஸ்லாமு அலைக்கும்
கடலூர் தெற்கு மாவட்ட
டிசம்பர் 6 கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்
இன்ஷா அல்லாஹ் லால்பேட்டை கைகாட்டில் மாலை 3.30 மணிக்கு நடைபெறும்


Wednesday, 3 December 2014

லால்பேட்டையில் தமுமுக சார்பில் டிசம்பா் 6 மிக பிரமாண்ட டிஜிட்டல் பேனா்....

லால்பேட்டையில் தமுமுக சார்பில் டிசம்பா் 6 கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆா்ப்பாட்டத்திற்கு வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய அளவில் (100*20)மிக பிரமாண்ட டிஜிட்டல் பேனா்....பேணா் அமைப்பு _லால்பேட்டை அமீரக _சகோதரா்கள் ...........

 

கடலூர் தெற்கு மாவட்டம் எள்ளேரி தமுமுக சார்பில் நடைபெற்றுவரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான பணிகள் மற்றும் பேணர்கள்..

கடலூர் தெற்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் தமுமுக சார்பில் வைக்கப்பட்டிருக்கும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கான பேணர்கள்..Friday, 18 January 2013

லால்பேட்டை தமுமுக மாணவரணி சார்பில் தர்பியா நிகழ்ச்சி

கடலூர் தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் நகர தமுமுக மாணவரணியின் சார்பில் மாணவர்களுக்கான தர்பியா முகாம் 13-01-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்கு பின் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் தமுமுக மாவட்ட தலைவர் எம்.ஹெச்.மெஹராஜூத்தீன் தலைமையில் நடைபெற்றது.
 அல் அய்ன் மண்டல தமுமுக நிர்வாகி கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி திருக்குர்ஆன் விளக்கவுரையாற்றினார்.தமுமுக மாவட்ட செயலாளர் என் அமானுல்லா வரவேற்புரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் அய்யூப் மமக முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்ஏ.யாசிர் அரஃபாத் தமுமுக மாவட்ட துணை செயலாளர் அப்துல் சமது தமுமுக மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணி செயலாளர் மௌலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி தமுமுக லால்பேட்டை நகர தலைவர் எஸ்.ஏ.முஹம்மது ஹாரிஸ் லால்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.ஏ.அஹமது அலி உள்ளிட்ட தமுமுக-மமக மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் மாணவரணி பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
லால்கான் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.எஸ்.ஹிப்பத்துல்லாஹ் வாழ்த்துரை வழங்கினார்.தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது "இளைய தலைமுறையினரிடம் இருக்க வேண்டிய நற்பண்புகள்" குறித்து வகுப்பெடுத்தார்.

லால்பேட்டை,கொள்ளுமேடு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்காண மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
நகர மாணவரணி நிர்வாகி மாசூக் நன்றியுரையுடன் முகாம் நிறைவுற்றது.

Tuesday, 24 July 2012

த.மு.மு.க அபுதாபி மண்டலம் சார்பாக இன்ஷா அல்லாஹ் வரும் 02.08.2012 (வியாழக்கிழமை),
ரமலான் இரவு தொடர் சொற்பொழிவுகள் - நேரடி ஒளிபரப்பு
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பாக இஸ்லாமிய பிரசாரப்பேரவை (IPP) நடத்தும் ரமலான் இரவு சொற்பொழிவு தினமும் இரவு 10 மணி முதல் 11 மணிவரை கீழ்க்கண்ட இணையதள முகவரியில் நேரடியாக ஒளிபரப்பாகும்.

Wednesday, 18 July 2012

பெரம்பலூரில் அணிதிரண்ட முஸ்லிம் அமைப்புகள்

பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது, அரும்பாவூரைச் சேர்ந்த யுரேஷா பேகம் ஆகியோருக்கு இஸ்லாமிய முறைப்படி கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெறவிருந்த திருமணத்தை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி ஷரியத் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது, ஆர்டிஓ ரேவதி மற்றும் சமூக நலத்துறை அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோரைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 17.07.12 அன்று பெரம்பலூர் பேருந்து நிலையம் எதிரிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது. 

அல்கோபர் கிளை சார்பாக நினைவுப்பரிசாக எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு வீர வாள் வழங்கப்பட்டது

தமுமுக-மமக வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு செயற்குழு (பொதுக்கூட்டம்) 13-07-2012 வெள்ளிக்கிழமை தம்மாம். அல்கோபர் கிளை சார்பாக மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.M.L.A. அவர்களுக்கு அல்கோபர் கிளை சார்பாக கிளை தலைவர் இஸ்மாயில் துணைச் செயலாளர் S.M.J. இலியாஸ் இணைந்து நினைவுப்பரிசாக வீர வாள் வழங்கப்பட்டது.
த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.