கடலூர்
தெற்கு மாவட்டம் லால்பேட்டையில் நகர தமுமுக மாணவரணியின் சார்பில்
மாணவர்களுக்கான தர்பியா முகாம் 13-01-2013 ஞாயிற்றுக்கிழமை மாலை மக்ரிப்
தொழுகைக்கு பின் இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் தமுமுக மாவட்ட
தலைவர் எம்.ஹெச்.மெஹராஜூத்தீன் தலைமையில் நடைபெற்றது.
அல்
அய்ன் மண்டல தமுமுக நிர்வாகி கொள்ளுமேடு முஹம்மது ரிஃபாயி திருக்குர்ஆன்
விளக்கவுரையாற்றினார்.தமுமுக மாவட்ட செயலாளர் என் அமானுல்லா
வரவேற்புரையாற்றினார்.மாவட்ட பொருளாளர் அய்யூப் மமக முன்னாள் மாவட்ட
செயலாளர் எஸ்ஏ.யாசிர் அரஃபாத் தமுமுக மாவட்ட துணை செயலாளர் அப்துல் சமது
தமுமுக மாவட்ட மனித உரிமை மற்றும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அணி செயலாளர்
மௌலவி எம்.ஒய்.முஹம்மது அன்சாரி தமுமுக லால்பேட்டை நகர தலைவர்
எஸ்.ஏ.முஹம்மது ஹாரிஸ் லால்பேட்டை பேரூராட்சி துணைத்தலைவர் எஸ்.ஏ.அஹமது அலி
உள்ளிட்ட தமுமுக-மமக மாவட்ட நகர நிர்வாகிகள் மற்றும் மாணவரணி
பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.
லால்கான்
ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி எம்.எஸ்.ஹிப்பத்துல்லாஹ் வாழ்த்துரை
வழங்கினார்.தமுமுக மாநில செயலாளர் கோவை செய்யது "இளைய தலைமுறையினரிடம்
இருக்க வேண்டிய நற்பண்புகள்" குறித்து வகுப்பெடுத்தார்.
லால்பேட்டை,கொள்ளுமேடு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்காண மாணவர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர். நகர மாணவரணி நிர்வாகி மாசூக் நன்றியுரையுடன் முகாம் நிறைவுற்றது.