TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Sunday 11 December 2011

அனைவருக்கும் கல்வித்திட்டம்: ஆசியரியர் தேர்வு இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கோரி முதல்வருக்கு மமக கடிதம்

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் சிறப்பு ஆசிரியர் தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற கோரி மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ  மாண்புமிகு தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் :

அனைவருக்கும் கல்வித்திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிற்றுவிப்பதற்காக
16549 ஆசிரியர்களை பகுதிநேர பணிக்காக தேர்வு செய்ய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாணையில் கலைப்பிரிவில் 5263 பகுதிநேர ஆசிரியர்களும், உடற்கல்வி பிரிவில் 5392 பகுதிநேர ஆசிரியர்களும், பணிக்கல்வி பிரிவில் 5904 பகுதிநேர ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட பகுதிநேர ஆசிரியர்களை தேர்ந்தெடுப்பதில் இடஒதுக்கீடு முறை பின்பற்றப் படவில்லை என்ற அதிர்ச்சி தகவலை அறிகிறோம். 69 சதவீத இடஒதுக்கீட்டிற்கு அரசியல் சட்ட பாதுகாப்பு கிடைக்க செய்து சமூகநீதியில் மைல்கல் பதித்த தங்களின் ஆட்சியில் இத்தகைய நடைமுறை அதிகாரிகளால் பின்பற்றப்படுவது சமூகநீதி ஆர்வலர்களுக்கு பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.

அன்புகூர்ந்து தாங்கள் இதில் சிறப்பு கவனம் செலுத்தி பகுதிநேர பள்ளி ஆசிரியர்களை தேர்வு செய்வதில் இடஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்திறுமாறும் இடஒதுக்கீடு முறையை பின்பற்றாமல் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பின் அதை ரத்து செய்திடுமாறும் வேண்டுகிறோம்.

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar