TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Thursday 29 December 2011

நிடாகத் முகாம் சிறப்பாக நடத்திய தமுமுகவிற்கு கேடயம்

சவூதியில் பரிதவிக்கும் பல லட்சம் இந்தியர்கள் மத்திய மாநில அரசுகளின் உதவியை எதிர்பாத்திருக்கும் லட்சக்கணக்கான இந்தியர்கள்.
சவூதியில் பாதிக்கப்பட்டுள்ள அப்பாவி மக்களை மீட்க மத்திய அரசு முன்வருமா?
சவூதியில் "நிடாகத்" திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டவர்களுக்கான 5 நாள் விழிப்புணர்வு முகாம் ரியாத் மாநகர் பத்தாஹ் மர்க்கப்பில் உள்ள நெஸ்ட்டோ ஹைப்பர்மார்கெட்டில் நடைபெற்றது. எங்களெல்லாம் மக்கள் பாதிப்புக்குள்ளாகி உதவிகளை எதிர்பார்த்து காத்திருக்கிறார்களோ அங்கெல்லாம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஓடோடிச் சென்று உதவிக்கரம் நீட்டுவதில் முன்னிலையில் இருக்கும்
என்பதை ரியாத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாம் மூலம் தேசம் கடந்து மொழி கடந்து தனது மனிதநேயப்பணிகளில் மீண்டும் முத்திரை பதித்துள்ளது என்றால் அது மிகையாகாது. 

சவூதியில் அந்நாட்டு மக்களின் வேலை இல்லா தின்டாட்டத்தை ஒழிக்கும் முகமாக சவூதி அரசு நிடாகத் திட்டத்தை அறிமுகப்படுத்தி கடந்த பல மாதங்களாக அதன் கடுமையை விளக்கி பல வகையிலும் நிறுவனங்களுக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்தத் திட்டதால் பாதிக்கப்படும் வெளிநாட்டவர்கள் அரசு அறிவித்துள்ள அந்தந்த வகைகளில் உங்களின் வழிகளை தேர்வு செய்துகொள்ளுங்கள் என்று பல வகையிலும் விளம்பரப்படுத்தி வந்துள்ளது. துரதிஸ்டவசமாக வெளிநாட்டவர் குறிப்பாக இந்தியர்கள் இதை ‍பெரிதும் காதில் போட்டுக் கொள்ளாதது வருத்தமளிக்கிறது. அரசு கடந்த மாதம் இறுதி அறிவிப்பு வெளியிட்டு இந்த மாதம் (சஃபர் 1433) இறுதியோடு சலுகை காலம் முடியும் என்று அறிவித்துவிட்டதால் இந்தியர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்தியத்தூதரகத்தில் அனுமதி பெற்று தூதரக பிரதிகள், வழக்கறிஞர்கள் குழுவுடன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், Pleaceindia, மற்றும் Sauditimes வுடன் இணைந்து நெஸ்ட்டோ ஹைப்பர்மாக்கெட்டில் மாபெரும் விழிப்புணர்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது 3 அல்லது 4 நாட்கள் திட்டமிட்டிருந்தோம் மக்களின் வருகை பெரும் திரளாக இருந்ததால் 5 நாட்கள் முகாம் நடைபெற்றது.

இந்த விழிப்புணர்வு முகாமில் நமது நாட்டினருடன் எமன், எகிப்து, சூடான், பாகிஸ்தான், பங்களாதேஷ்  என்று பலதரப்பட்டநாட்டினரும்  பயன்பெற்றனர். விரிவாக விளக்கங்கள் கொடுக்கப்பட்டது.
நிடாகத்திட்டம் என்பது (சுருக்கமாக) அனைத்து துறைகளிலும் உள்ள வேலை வாய்புகளில் சதவிகிதத்தின் அடிப்படையில் சவுதி மைந்தர்களை வேலையில் அமர்த்த ‍வேண்டும் என்ற கட்டாயம், பணியில் அமர்த்தப்பட்டவரின் முழுவிபரம் அரசின் தொழிளாலர் நலத்துறையிடம் பதிவு செய்யப்படுவதோடு அவரின் ஊதியவிகிதத்தில் 5 சதவிகிதம் அரசின் சமூகநல காப்பீடு திட்டத்தில் அந்நிறுவனம் செலுத்தவேண்டும். இந்தக்காப்பீடு பணியில் இருப்பவர் விபத்து மற்றும் மரணம் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் இந்த காப்பீடு அவருக்கு பெரும் உதவியாக இருக்கும் என்று சமூலநல காப்பீடு திட்டமும் காட்டாயப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வகையான வெளிநாட்டு தொழிலாளர்களின் குடியுரிமை மீண்டும் புதுப்பிக்கப்படாது என்று பட்டியலிடப்பட்டுள்ளது. பாதிக்கப்படும் வெளிநாட்டவர்கள் அரசு அறிவித்துள்ள கால கெடுக்குள் உரிய வழிகளை தேர்வு செய்ய வேண்டும் அல்லது நாட்டை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்ற கட்டாயம்.

நான்கு வண்ணங்களாக பிரிக்கப்பட்டுள்ள நிறுவனங்களில் சிகப்பு வண்ணத்தில் வரும் நிறுவனத்திற்கான கால கெடு இந்த மாதம் (சபர் 1433) இறுதிஆகும். சிகப்பு வண்ணத்தில் வரும் நிறுவனம் அரசின் அனைத்து சட்டதிட்டங்களையும் பின்பற்றாவிட்டால் இந்த மாதம் இறுதிக்குப் பின் அந்த நிறுவனத்தின் வங்கி பரிவர்த்தனை உட்பட அனைத்து வழிகளும் முடக்கப்படும் அந்நிறுவனத்தில் பணியாற்றும் வெளிநாட்டு பணியாளர்களுக்கும் இது பொருந்தும். இந்த மாதம் (சபர் 1433) இறுதிக்குப்பின்னும் அந்த சிகப்பு வண்ண நிறுவனத்தில் பணியில் இருப்பவர்களின் நிலை அதோ கதிதான் அவர்களுக்கு 2 வழிகள் காட்டப்பட்டுள்ளன ஒன்று பச்சை மற்றும் சில்வர் (பிளாட்டினம்) நிற வண்ணத்திற்குள் வரும் நிறுவனத்தில் பணியில் சேர்ந்து ஸ்பான்சர் மாற்றிக் கொள்ள முடியும் அல்லது தனது கணக்கை முடித்துக் கொண்டு தாயகம் திரும்பி விடவேண்டும். இவைகளை செய்யாமல் என்னதான் நடக்கிறதென்று பார்போமே என்று சொல்பவர்களை முகாமில் அதிகம் காண முடிந்தது இவர்களின் நிலையை அரசு தெளிவாக விளக்கி உள்ளது இறுதி காலக்கெடுவுக்குப்பின் எந்த வழியும் இல்லை சிறைச்சாலையைத் தவிர என்று.

மஞ்சல் வண்ணத்திற்கு 6 மாத காலக் கெடு கொடுக்கப்பட்டுள்ளது. பச்சை மற்றும் சில்வர் (பிளாட்டினம்) சிறந்த மற்றும் மிகச் சிறந்த நிறுவனம் என்ற வரிசையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு 1432 உரிய அனுமதியில்லாமல் சவுதியில் பணியாற்றுபவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி குறிப்பிட்ட காலகெடுக்குள் வெளிநாட்டவர்கள் அவரவர் நாட்டிற்குச் செல்லலாம் என்று அரசு அறிவித்திருந்தது நமது நாட்டினரும் இந்த சலுகையை பயன்படுத்தி ஏராளமானோர் தாயகம் திரும்பினர். இந்த சலுகையையும் பயன்படுத்தாமல் பிறகு பார்ப்போமே என்று இருந்தவர்கள் இப்போது கையை பிசைந்து கொண்டு முகாமுக்கு வந்திருந்த ஏராளமானோரை காணமுடிந்தது.

அரேபியாவிற்கு சம்பாதிக்கச் செல்கிறோம் அங்கே ரியால்களும் தங்கங்களும் கொட்டிக்கிடக்கிறதாம் அள்ளிக்கொண்டு வருவோம் என்ற கனவுகளோடு சவுதி வருபர்கள் அவர்களின் வேலை ஊதியம் மற்றும் நிறுவனம் பற்றி விசாரிக்காமல் வண்ணவண்ண கனவுகளோடு விமானத்தில் பறந்து வந்து விடுகின்றனர் இங்கே வந்து பார்த்தபின் சுத்தம் செய்யும் வேலையா? தெருக்கூட்டும் வேலையா? தோட்ட வேலையா? ஆடு ஒட்டகம் மேய்க்கும் வேலையா? 400 ரியால் சம்பளமா? அதலேயே சாப்பிடவும் வேண்டுமா?? கனவுக்கோட்டைகள் தகர்ந்து கண்கணில் தாரைதரையாக கண்ணீர்... நாம் கண்ட க ன வை ‍எப்படியும் நினைவாக்க வேண்டும் என்ற ஆசையில் அந்த ஸ்பான்சரை விட்டு ‍வெளியே ஓடிவந்து வெளியில் சம்பாதித்து ஒருவழியாக பணத்தாசை மனதை நிரப்பியவுடன் தாயகம் செல்ல வேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.அப்போது தான் அதன் விபரீதம் புரிகிறது நாம் எப்படி தாயகம் செல்ல முடியும் என்று? ஆம் முடியவே முடியாது. உங்களின் பணத்தைசை சொந்தங்களையும் உறவினர்களை பார்க்க முடியாமல் செய்து விடுகிறது. எந்த ஆவணமும் அவரிடம் இருப்பதில்லை தாயகம் செல்வதற்கான எந்த வழியும் கிடைப்பதில்லை. நடைபெற்ற இந்த முகாமில் 5 ஆண்டு முதல் 10, 15 ஆண்டுகள் வரை தாயகம் செல்ல முடியாமலும் எந்த ஒரு ஆவணமும் இல்லாமலும் இருப்பதாக நமக்கு கிடைத்த தகவல் இதயத்தை உளுக்கிவிட்டது.

இதில் ஆந்திராவைச் சேர்ந்த பாவப்பட்ட அப்பாவிகள் 40 ஆயிரம் இருப்பதாக நமது முகாமில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இது போல் இந்திய அரசின் உதவியை எதிர்பார்த்து 2 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தவிக்கிறார்கள் இது போல் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மத்திய மற்றும் அந்தந்த மாநில அரசுகள் கவனத்தில் கொண்டு சவுதி அரசுடன் பேச்சு வார்த்தை நடத்தி தாயகம் அழைத்து வர அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும். மத்திய அரசு இதில் கவனம் செலுத்துமா?

வெளிநாட்டிற்கு பணிக்குச் செல்லும் சகோதரர்களே! உங்களின் மேலான கவனத்திற்கு. நீங்கள் வெளிநாட்டிற்கு வேலைக்கு செல்கிறீர்களா? அதற்கான அரசு ஆவணங்கள் முறையாக உள்ளதா என்று சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்களின் தொழில் உத்திரவாதம் மற்றும் ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டு அரசுத்துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதா என்றும், நீங்கள் பணிக்குச் செல்லும் அந்த நிறுவனம் அந்த நாட்டில் இயங்கும் நமது தூதரகத்தின் இணையதளம் மூலம் பிளாக்லிஸ்ட்டில் உள்ளதா என்றும், முடிந்தால் நண்பர்கள் மூலம் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் அறிந்து ஒப்பந்தம் செய்து செல்வது உங்களுக்கு நல்லது. நீங்கள் பணிக்குச் செல்லும் நாட்டின் சட்ட திட்டங்களை முழுமையாக பின்பற்றுங்கள் முடியாவிட்டால் தாயகம் திரும்பி விடுங்கள் உங்களுக்காக உங்கள் அன்புச் சொந்தங்கள் உங்கள் வீட்டில் காத்திருக்கிறார்கள். நீங்கள் ஒப்பந்தம் செய்து சென்ற பணி மற்றும் ஊதியம் வேறு உங்களுக்கு வழங்கி இருக்கும் பணி ஊதியம் வேறு என்று கொடுக்கப்பட்டுள்ளதா? அந்த நாட்டில் இருக்கும் நமது இந்தியத் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள் முடியாவிட்டால் தாயகம் திரும்பி விடுங்கள் அந்த ஸ்பான்சரை விட்டு வெளியேறி சம்பாதிக்க நினைக்காதீர்கள் அது சவுதி அரேபியாவில்  தண்டிக்கப்படும் கடுமையான சட்டம்.

நீங்கள் பயணம் புறப்படும் போது உங்கள் பயணப் பொருள் தவிர அறிமுகம் அல்லது அறிமுகமில்லாத யார் என்ன கொடுத்தாலும் கொண்டு வராதீர்கள். குறிப்பாக மருந்துப் பொருள்கள். உயிர்காக்கும் சில மருந்துகள் தவிர (அதுவும் ஒரு சில மட்டுமே) மற்ற அனைத்து மருந்துகளும் வெளிநாட்டுப் பயணிகள் சவுதிக்குள் கொண்டு வர தடைசெய்யப்பட்டுள்ளது. அனைத்து உயர்தர மருந்துகளும் சவுதியில் கிடைக்கின்றன.

இது போன்ற அனைத்து வகையிலும் நமது இந்தியச் சமூகத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் இந்த விழிப்புணர்வு முகாம் மூலம் விளக்கம் அளிக்கும் வாய்ப்புக் கிடைத்தது எல்லாப்புகழும் இறைவனுக்கே.

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar