
தமுமுக தலைவர் ஜே.எஸ்.ரிபாயீ அவர்கள் சிறைக்குச் சென்று நான்கு வாரங்களாகி விட்டன. அவர் நல்ல உடல்நலத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருக்கிறார். தொடர்ந்து இயக்க சகோதரர்களும், உறவினர்களும் அவரை சந்தித்து வருகின்றனர்.
சிறையில் புதிய நண்பர்களுடன் அளவளாவும் நேரம் போக மீதி நேரங்களில் புத்தக வாசிப்பில் செலவிடுகிறார். தனக்கு பார்வையாளர்கள் வழங்கும் பழங்கள்
உள்ளிட்ட உணவுப்பொருட்களை சக கைதிகளுக்கும் கொடுப்பதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிகிறார்.
உள்ளிட்ட உணவுப்பொருட்களை சக கைதிகளுக்கும் கொடுப்பதுடன், அவர்களின் பிரச்சினைகளையும் கேட்டறிகிறார்.
இதனிடையே, அவரது வழக்கு தொடர்பான வேலைகள் தலைமையகம் சார்பில் துரிதகதியில் முடுக்கி விடப்பட்டுள்ளது. இப்பணிகளைக்கண்காணிக்கும் பொறுப்பு மாநிலப் பொருளாளர் ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ்விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சிறையில் வாரத்திற்கு ஒருநாள் மட்டுமே பார்வையாளர்கள் சந்திக்க முடியும் என்பதால், வியாழக்கிழமை மட்டுமே சந்திக்க முடிகிறது. மேலும் ஞாயிறுதோறும் அவரது உறவினர்கள் சந்திக்கவும், எல்லா நாட்களிலும் அவரது வழக்கறிஞர் சந்திக்கவும் அனுமதிக்கப்படுகிறார்கள். ஒரே நாளில் கூட்டம் கூட்டமாக வருவதைத் தவிர்க்குமாறு சிறை நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளதால், மாவட்ட நிர்வாகிகள் மட்டும் இப்போது அவரை சந்தித்து வருகின்றனர்.
அவர் விரைவில் சிறையிலிருந்து வெளிவர தொடர்ந்து இறைவனைப் பிரார்த்திப்போம்.
No comments:
Post a Comment