எந்த விதமான வேறுபாடு இல்லாமலும் காழ்ப்புணர்வுகள் ஏதுமின்றி நம் இஸ்லாமிய இயக்க தலைவர்கள் அனைவரும்கடந்த ஜனவரி 14,15,ம் தேதிகளில் JAQH நடத்திய படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி என்ற மாநில மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில்..
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பாளர் குணங்குடி ஹனிஃபா, பொருளாளர் ரஹ்மதுல்லாஹ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தேசிய தலைவர் S.M..பாக்கர், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநிலசெயலாளர் கோவை ஜாபர், S.D.P.I யை சேர்ந்த மாநில நிர்வாகிகளும் மற்றும் அனைத்து சுன்னத் வல் ஜமாத்தார்களும் இந்த மாநில மாநாட்டில் கலந்து கொண்டது இயக்கங்கள் வேறுபட்டாலும் எங்களுடைய ஈமான் வேறுபடவில்லை என்று பறைசாற்றியது அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.


No comments:
Post a Comment