19/01/2011 வியாழன் அன்று இஷாவுக்கு பிறகு ரியாத் மாநகரில் பத்தாஹ் அல் ரொஸைஸ் கட்டிடத்தில்
உள்ள தமுமுக மத்திய மண்டல தலமையகத்தில் மண்டல கிளைகளின் மாதாந்திர
கூட்டம் மண்டல பொதுச்செயலாளர் சகோதரர் ஹிசைன் கனி அவர்களின் தலமையில் நடைப் பெற்றது.

இதில் அனைத்து கிளை நிர்வாகிகளும் கலந்துகொண்டு கிளைகளின் கடந்த கால செயற்பாடுகள்
இன்ஷா அல்லாஹ் எதிர்கால பணிகள் குறித்தும் விரிவாக எடுத்து உரைத்தார்கள்,
நிடாகத் நிகழ்வினை மிகவும் சிறப்பாக செய்து பாதிக்கப்பட்ட ஏராளமான சகோதரர்களுக்கு
உதவி செய்த மண்டல தலமையகத்தின் சிறந்த செயல்பாட்டினையும், தமிழர் அல்லாமல் மாற்று
மொழி சகோதரர்களும் தமுமுக என்றால் என்ன என்று ஆவலுடன் விசாரித்ததையும் கிளை நிர்வாகிகள்
நினைவு கூர்ந்தனர்.
தமுமுக தஃவா பிரிவு மெளலவிகள்
மெளலவி இப்ராஹிம் அன்வாரி அவர்கள் இயக்கவாதிகளின் பண்புகள் என்ற தலைப்பிலும்
மெளலவி பரக்கத் அலி அவர்கள் உளத்தூய்மை என்ற தலைப்பிலும் உறையாற்றினார்கள்
No comments:
Post a Comment