
ஈரோடு மற்றும் கோவை மாவட்டங்களில் கடந்த
ஜனவரி 4,5, மற்றும் 6 நாட்களில் சட்டபேரவை மதிப்பீட்டு குழு ஆய்வு
மேற்கொண்டது மதிப்பீட்டு குழு தலைவர் பி.ஜி.நராயணன் தலைமையிலான
இக்குழுவில் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மனிதநேய மக்கள் கட்சி
தலைவருமான பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா, டாக்டர் கிருஷ்ணசாமி
(ஒட்டப்பிடாரம்), ஆறுமுகம் (வால்பாறை), பிரின்ஸ் (குளச்சல்), தங்கத்தமிழ்
செல்வன் (ஆண்டிப்பட்டி), தனசிங் (பல்லாவரம்), நீலகண்டன்(திரு.வி.க. நகர்,
சாமி (மேலூர்) உள்ளிட்டோர் பங்கு கொண்டனர்.
இக்குழு
ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் உள்ள ஆவின் பால் பொருட்கள் தயாரிப்பு ஆலை,
சத்துணவு கூடம், பவானி விதை பண்னை, ஆப்பக்கூடல் சக்தி சர்க்கரை ஆலை, சுமார்
30 லட்சம் செலவில் போடப்பட்டுள்ள பனங்காட்டூர் ஆதி திராவிடர் காலனி
சாலைகளை ஆய்வு செய்து இறுதியில் மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைபெற்ற
கலதாய்வு கூட்டத்தில் ஈரோட்டில் பெருகிவரும் போக்குவரத்து நெரிசல்
சம்மந்தமாக விரிவாக விவாதிக்கப்பட்டது.
கோவை
மாவட்டம் மேற்கொண்ட ஆய்வில் வால்பாறை, டாப்சிலிப் காட்டுப்பகுதி,
பெத்தநாயகனூர் ஆரம்ப சுகாதார நிலையம், கிணத்துக்கடவு சாலைகளை ஆய்வு செய்த
குழு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவகத்தில் நடைப்பெற்ற காலந்தாய்வு கூட்டத்தில்
வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களின் சம்பள மற்றும் பென்சன் பிரச்சனை,
வால்பாறை நகர பேருந்து நிறுத்தத்தை உடனே மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர
போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும். விலங்களால்
பாதிக்கும் மக்களுக்கு தகுந்த நிவாரணம், மருத்துவ உதவி வழங்கவும், மாவட்ட
ஆட்சியருக்கு இக்குழு கோரியது. கோவை மாநகரில் மேட்டுப்பாளையம் சாலையில் 8
கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு; மக்கள் பயன்பாட்டிற்க்காக இதுவரை
திறக்கப்படாமல் இருப்பது குறித்தும்;, கோவை நகரத்தில் பாதாள சாக்கடை
திட்டத்திற்காக தோண்டப்பட்ட குழிகளை பணிகள் முடிந்த உடனே மூட வேண்டுமெனவும்
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தது.

பள்ளிக்கூடங்களில் வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு பார்த்து ஆய்வு செய்யும் போது...

ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டத்தில்...

ஆணைமலை நம்பியாற்றின் நீரோட்டத்தை பார்வையிட்ட போது...

பெத்தநாயகனுர் அரசு சுகாதார நிலையத்தின் ஆய்வின் போது...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வு கூட்டம்
No comments:
Post a Comment