கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் மாவட்டத்தையும், பாண்டிச்சேரியையும் கடுமையாகத் தாக்கிய தானே புயல் காரணமாக இந்த இரண்டு மாவட்டங்களும் கடுமையான சேதத்திற்கு உள்ளாயின.
கடும் சீற்றத்துடன் வீசிய காற்று அங்கிருந்த மக்களின் வீட்டுக்கூரைகளைப் பிய்த்து எறிந்தது.
காற்றின் வேகம் காரணமாக
கடலூர் மற்றும் பாண்டி ஆகிய பகுதிகளில் இருந்த அதிகமான மரங்கள் வேறோடு சாய்ந்தன. இவ்வாறு சாய்ந்த மரங்கள் பெரும்பாலாணவை வீடுகள் மீது விழுந்ததால் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்தன.
காற்றின் வேகம் காரணமாக
பரங்கிப்பேட்டை பகுதியில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. தானே புயல் காரணமாக இந்தப் பகுதியில் இருந்த குடிசை வீடுகள் அடியோடு சேதமடைந்தன. குடிசைகள் அப்படியே வீழ்ந்ததாலும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததாலும் அங்கிருந்த அனைத்துப் பொருட்கள் வீணாயின.
தானே புயல் மழையால் பெரிதும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் கடலூர் மாவட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டையில் தமுமுக சார்பில் நிவாரண உதவி வழங்கப்பட்டது 09/01/2012 இன்று தமுமுக மாநில தலைவர் கண்ணியமிகு பேராசிரியர் அவர்கள் நேரில் சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, நிவாரன உதவிகளை வழங்கினார்.
No comments:
Post a Comment