நடைபெறுவதாகஇருந்தமார்க்க விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சி மார்ச் 17ம் தேதி மாற்றப்படுவதாக மாவட்ட செயலாளர் இ.தாஹிர் பாஷா விசுவக்குடி அஞ்சலுக்கு தெரிவித்தார்.
இந்த மார்க்க விளக்கப் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு தமுமுக-வின் மூத்த தலைவரும் தற்போதைய இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியில் மனிதநேய மக்கள் கட்சி சார்பாக போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினருமான பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா அவர்கள் கலந்து கொள்ள இருப்பாதால் இந்த தேதி மாற்றம் என அறிவித்தார்.
1960ம் ஆண்டு டிசம்பர் மாதம் 21ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் பிறந்த ஜவாஹிருல்லா அவர்கள்சிறந்த சமுதாய சிந்தனையாளர்&சமூக சேவகர், சிறந்த பேச்சாளர், சிறந்த எழுத்தாளரும் ஆவார். 1985ம் ஆண்டு முதல் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி 2009ம் ஆண்டு விருப்ப ஓய்வுபெற்றார்.முனைவர் பட்டம் பெற்றவர்,
1995ம் ஆண்டு முதல் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து 2012ம் ஆண்டு ஜனவரி வரை வழிநடத்தியவர். மேலும் தமுமுகவின் மூத்த தலைவராக இருந்து வழிநடத்துபவர்,
ஐநா சபையில் உரையாற்றியவர். மலேஷியா சிங்கப்பூர், சவுதி அரேபியா குவைத், கத்தர், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுக்கு சென்று பல பொதுக் கூட்டங்களில் பங்கு கொண்டவர் என பேராசிரியர் ஜவாஹிருல்லாவை பற்றி பெரம்பலூர் மாவட்ட தமுமுக செயலாளர் இ.தாஹிர் பாஷா அறிவித்தார்.
மேலும் இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரகணக்கானவர்கள் பங்கு பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment