TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Monday 27 February 2012

இளைஞர் ஆஷிக் ஹுசைன் சுட்டுக்கொலை - ராணுவத்திற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்



ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாரமுல்லா மாவட்டத்தில் லைஸர் என்ற கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை இந்திய ராணுவத்தைச் சேர்ந்த சிலர் சுட்டுக் கொன்றதால் அம்மாநிலத்தில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
சுட்டுக்கொல்லப்பட்ட இளைஞனின் பெயர் ஆஷிக் ஹுசைன். வயது 22. இந்த இளைஞர் சென்ற வாரம் வெள்ளிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார். தீவிரவாதிகள் ஊடுருவல் என்ற தகவல் கிடைத்ததால் 22 ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் படை வீரர்களும் காவல்துறையினரும் அடங்கிய கூட்டுப்படை இளைஞரை சுட்டுக்கொன்றதாக பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து இளைஞர் ஆஷிக் ஹுசைனின் கொலையைக் கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சோப்பூர் குப்வாரா சாலை முழுவதுமாக முடங்கியது. ஆஷிக் ஹுசைனை உடனடியாக அடக்கம் செய்ய பொதுமக்கள் மறுத்துவிட்டனர்.கொலையாளிகளான ராணுவத்தினரைக் கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர். அப்பகுதிகளில் உள்ள ராணுவ முகாமை உடனடியாக அகற்றவேண்டும் என்றும் முழக்கம் எழுப்பினர்.
தீவிரவாதி என தவறுதலாக குற்றம்சாட்டி படுகொலை செய்யப்பட்ட ஹுசைனின் உடலைச் சுற்றி ஏராளமான மக்கள் திரளத்தொடங்கினர். இதனைத் தொடர்ந்து உள்துறை இணையமைச்சர் நஸீர் அஸ்லம் வானி, மாநில காவல்துறைத் தலைவர் குப்தீப் கோடாவும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர். அப்பாவி ஆஷிக் ஹுசைனின் படுகொலை தொடர்பாக உமர் அப்துல்லா அரசும், இந்திய ராணுவத் துறையும் தனித்தனியாக விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் அஸ்லம் தெரிவித்தார்.
வெளிப்படையாக விசாரணை நடத்தப்படும்; இதுகுறித்து யாரும் கவலைகொள்ள வேண்டாம் என ராணுவத் துணைத் தளபதி ஹஸ்னைன் வாக்குறுதி வழங்கியுள்ளார். ராணுவத்தினர் சிலரால் கொலை செய்யப்பட்ட இளைஞன் ஆஷிக் ஹுசைனின் குடும்பத்தினரிடம் இந்த சம்பவத் திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.

ராணுவம் மற்றும் உள்துறை அமைச்சரின் உறுதி மொழியினைத் தொடர்ந்து இளைஞர் ஆஷிக் ஹுசைனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான அப்பாவி காஷ்மீரிகள் இப்படித்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
ராணுவம் கேட்கும் மன்னிப்பு அவர்களுக்கு உயிர் கொடுக்குமா? அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் அளிக்குமா?
" "தீவிரவாதி என தவறுதலாக குற்றம்சாட்டி படுகொலை செய்யப்பட்ட ஹுசைனின் உடலைச் சுற்றி ஏராளமான மக்கள் திரளத் தொடங்கினர்.""

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar