TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Wednesday 18 July 2012

லால்பேட்டையில் எழுச்சியுடன் நடைப்பெற்ற தமுமுக – மமக பொதுக்கூட்டம்

லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் எஸ்.ஏ.முனவ்வர் உசேன் நினைவரங்கிள்   கடந்த சனிக்கிழமையன்று நடைப்பெற்ற தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மமக அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மமக முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் தலைமை வகித்தார்.பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி,மாநில நிர்வாகிகள் ஹாரூண் ரஷீத், நாசர் உமரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.


இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
/
தீர்மானம் 1
/
புதுச்சேரியில் உள்ள அரசு மருத்துவமனை மற்றும் ஜிப்மர் மருத்துமனைகளில் நமது தமுமுக ஆம்புலன்ஸ் அவசர சேவைக்காக  மையத் எடுக்க செல்லும் போது அங்குள்ள மருத்துவனையில் உள்ள ஆம்புலன்ஸ் டிரைவர்களால் நமது ஆம்புலன்ஸ் மற்றும் டிரைவர்களின் சேவைக்கு பாதிப்புக்கு { இடையூறு } ஏற்படுகிறது.இத்தகைய பிரச்சினைகளை சம்மந்தப்பட்ட துறைக்கு தெரியப்படுத்துவதோடு இடையூறுகள் ஏற்படாதவாறு தடுக்க இப்பொதுக்கூட்டம் வாயிலாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தீர்மானம் 2
/
லால்பேட்டையில் உள்ள அரசு மேல்நிலைபள்ளியை பிரித்து பெண்களுக்காக தனிப் பள்ளியை உருவாக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு உத்தரவும் கிடைத்தது அதற்கான தொகை ரூபாய் ஒரு லட்சம் பணமும் லால்பேட்டை ஜமாஅத் சார்பாக செலுத்தப்பட்டது கடந்த ஆட்சியில் துணை முதல்வராக இருந்த திரு மு.க.ஸ்டாலின் கடலூரில் நடந்த விழாவில் வைத்து இப் பள்ளியை திறப்பு விழா செய்தார். எப்பணியும் நடை பெறாமலேயே  திறப்பு விழா கண்டபோதும் இப்பள்ளி இன்று வரை அமைக்கப்படவில்லை. இப்பள்ளி அமைவதை ஏதோ ஒரு மறைமுக சக்தி தடுக்கிறது அதை வண்மையாக கண்டிக்கிறோம். மேலும் இப்பள்ளிக்கு தேவையான நடடிக்கைகள் எடுத்து இப்பள்ளி உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இனியும் இதை தாமதம் செய்துக் கொண்டே இருந்தால் அதற்காக தனியே ஒரு போராட்டம் அறிவித்து வென்றெடுக்கவும் தயாராக உள்ளோம் எனவே உடனே அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி துவங்கப்பட வேண்டுமென இப்பொது கூட்டம் கேட்டுக்கொள்கிறது.
தீர்மானம் 3
/
சமீபத்தில் பெரம்பலூர் ஆட்சித்தலைவர் ஒரு திருமண நிகழ்வில் தலையிட்டு  மணப்பெண்ணுக்கு 17 வயது மட்டுமே என்பதால் இத்திருமணத்தை நடத்தக் கூடாது என தடுத்துள்ளார். இதை கவனத்தில் கொண்ட மாநில ஜமாஅத்துல் உலமா இதை வண்மையாக கண்டித்துள்ளதுடன் ஷரீஅத் வழங்கியுள்ள உரிமையை அரசு கைவைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளது. அதை ஆதரித்து இப்பொதுக்கூட்டம் தீர்மானம் நிறைவேற்றுகிறது.
தீர்மானம் 4
/
லால்பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 11 ம் வகுப்பு சேர்க்கையில் சி குரூப்பிலேயே அதிகமானோர் சேர்க்கப்படும் நிலை உள்ளது இது செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. மேலும் சி குரூப்பில் சேர ரூபாய் இரண்டு ஆயிரம் வசூலிக்கப்படுகிறது. மேலும் சி குரூப்பிற்கு சொந்தமாக ஆசிரியர் போட்டு நடத்துகிறோம் அதனால் இந்த பணம் வாங்குகிறோம் என்று கூறுகின்றனர் இது ஏற்கத்தக்கதல்ல. அரசு பள்ளியில் இலவச கல்வி இல்லை என்றால் இலவச கல்வியை தனியார் பள்ளிகள் எப்படி வழங்கும்? எனவே இக்கட்டணத்தை விலக்கிக் கொண்டு இலவசமாகவே 11 ம் வகுப்பு சேர்க்கை நடைபெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
தீர்மானம் 5
/
கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பேரூராட்சிகளிலும் அரசு மருத்துவமனை உள்ளது ஆனால் துரதிர்ஷ்டவசமாக லால்பேட்டை பேரூராட்சியில் மட்டும் ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவனை இல்லாமல் உள்ளது. இந்த ஊருக்கு மருத்துவனை வேண்டும் என்பதை நீண்ட காலமாக கோரிக்கை வைத்து முயற்ச்சி செய்த போதும் என்ன காரணமோ மருத்துவமனை அமைக்கப்படவே இல்லை. எனவே இனியாவது இப்போது இயங்கும் பேரூராட்சி நிர்வாகம் இதை உடனடியாக கவனத்தில் கொண்டு துரிதமாக ஒரு மருத்துவமனை அமைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த பொதுக்கூட்டம் வலியுறுத்துகிறது. அரசு வழங்கும் திட்டம் எல்லா ஊர்களுக்கும் பொதுவானது எனும் போது லால்பேட்டைக்கு மட்டும் அரசு மருத்துவமனை தராத அரசு நிர்வாகம் ஏன் பாரபட்சம் காண்பிக்க வேண்டும்? எனவே உடனடியாக இந்த ஊரில் ஒரு சிறந்த மருத்துவமனை அமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறது.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
/
முன்னதாக மாலை 5 மணியளவில் லால்பேட்டை புது பஜாரில் அமைக்கப்படு இருந்த மர்ஹும் அல்லாமா கே.ஏ.முஹம்மது ஜெகரியா ஹஜ்ரத் நினைவு நுழைவு வாயில் இருந்து மோட்டார் வாகன பேரணி புரப்பட்டு லால்பேட்டை புது பஜார் மற்றும் எள்ளேரி ஆகிய முக்கிய இடங்களில் தமுமுக, மமக கொடிகளை மாநில நிர்வாகிகள் ஏற்றி வைத்தனர்.
/
 கூட்டத்தில் மாவட்டத் தலைவர் மெஹராஜுத்தீன், நெல்லிக்குப்பம்ம் தம்பிராஜா, மாவட்டப் பொருளாளர் ஏ.எம்.அய்யூப்,வர்த்தக அணிச் செயலாளர் அப்துல் சமது,பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் எஸ்.ஏ.அஹமது அலி,உள்ளிட்ட மாவட்ட நகர நிர்வாகிகள் மற்று மாவட்டத்தில் பல் வேறு ஊர்களில் இருந்து தமுமுக, மமக தொன் டர்கள் ஆயிரக்கனக்கானோர்  கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar