TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Friday 30 December 2011

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு: மத்திய மந்திரியின் அறிக்கையை கிழித்து பா.ஜனதா அமளி இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்க எதிர்ப்பு தெரிவித்து, பாராளுமன்றத்தில் மத்திய மந்திரியின் அறிக்கையை கிழித்து பா.ஜனதா எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் சபை ஒத்திவைக்கப்பட்டது
.
5 மணி நேர விவாதம்
பாராளுமன்றத்தில் நேற்று, நீதிபதிகள் மீதான புகார்களை விசாரிக்க வகைசெய்யும் மசோதா, ஐகோர்ட்டு நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62&ல் இருந்து 65 ஆக உயர்த்த வகைசெய்யும் அரசியல் சட்ட திருத்த மசோதா ஆகியவற்றின் மீது விவாதம் நடைபெற்றது. 5 மணி நேரத்துக்கு மேலும் விவாதம் நீடித்தது.
அப்போது, எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் குறுக்கிட்டு, இந்த மசோதாக்கள் மீது 4 மணி நேரம் விவாதம் நடத்தவே அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. அந்த நேரத்தையும் தாண்டிவிட்டதால், விவாதத்தை நிறுத்தி விட்டு, மசோதாக்கள் மீது ஓட்டெடுப்பு நடத்த வேண்டும். ஆளுங்கட்சியினர் சபையில் இல்லாவிட்டாலும், எங்கள் கட்சியினர் ஓட்டுப்போட தயாராக உள்ளனர் என்று கூறினார்.
அப்போது சபாநாயகர் இருக்கையில் இருந்த கிரிஜா வியாஸ், சுஷ்மா சுவராஜின் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை. அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டாலும், பாராளுமன்றமே உயர்வானது. நேரத்தை நீட்டிக்க பாராளுமன்றத்துக்கு உரிமை உள்ளது என்று கிரிஜா வியாஸ் கூறினார். அவரது கருத்தை ஏற்க மறுத்து, பா.ஜனதா உறுப்பினர்கள் ஓட்டெடுப்பை வலியுறுத்தி கூச்சலிட்டனர்.
இந்த கூச்சலுக்கிடையே, கிரிஜா வியாஸ், விவாதத்துக்கு சிறிது இடைவெளி
விட்டார். இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டில்
சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிக்கையை
தாக்கல் செய்ய மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி சல்மான்
குர்ஷித்தை கேட்டுக்கொண்டார். அதன்படி, சல்மான் குர்ஷித் அறிக்கையை
வாசிக்கத் தொடங்கினார்.
சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதன் மூலம், இதர
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டின் அளவு குறைவதாக குற்றம்
சாட்டி, பா.ஜனதா உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். சமாஜ்வாடி கட்சி
தலைவர் முலாயம்சிங் யாதவும், உள்ஒதுக்கீடு பற்றி ஏதோ கூற முயன்றார்.
ஆனால், கூச்சல் குழப்பத்தால் அவர் கூறியது யாருக்கும் கேட்கவில்லை.
அறிக்கை கிழிப்பு
அமளியில் ஈடுபட்ட பா.ஜனதா உறுப்பினர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த
சல்மான் குர்ஷித்தின் அறிக்கையின் நகல்களை கிழித்து எறிந்தனர். சபாநாயகர்
இருக்கை அருகே சென்று கோஷமிட்டனர்.
இதனால், சபையை நாள் முழுவதும் ஒத்திவைத்து கிரிஜா வியாஸ் உத்தரவிட்டார்.
2 மசோதாக்கள் மீதான விவாதம் நிறைவு பெறாமலேயே, அரைகுறையாக சபை அலுவல்கள்
முடிவடைந்தன.
முன்னதாக, மத்திய சிறுபான்மையினர் நலத்துறை மந்திரி சல்மான் குர்ஷித்
வாசித்த அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:&
மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் சிறுபான்மையினரில்
பிற்படுத்தப்பட்டோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு தனி
இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு
வருகிறது. எனவே, 4.5 சதவீத உள்ஒதுக்கீட்டை மத்திய அரசு வழங்குகிறது. அரசு
பணிகளிலும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இந்த உள்ஒதுக்கீடு
வழங்கப்படும்.
கண்டிப்பாக, சிறுபான்மையினரில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு மட்டுமே
இந்த உள்ஒதுக்கீடு வழங்கப்படும். இதை அமல்படுத்துவதில், அரசியல் சட்ட
முட்டுக்கட்டை எதுவும் ஏற்படாது. ஏனென்றால், இத்தகைய உள்ஒதுக்கீட்டை
வழங்க இந்திரா ஸ்வானி வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இவ்வாறு சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
http://www.lalpetexpress.com/

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar