ராமநாதபுரம் மஸ்ஜித் தக்வா பள்ளிவாசலில்,22-12-2011 வியாழக்கிழமை அன்று லஞ்சம்,வரதட்சணை ஒழிப்பது தொடர்பான கருத்தரங்கம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் நடைபெற்றது.
ராமநாதபுரம் நகர் தலைவர் சுல்தான் தலைமை வகித்தார். நகர் நிர்வாகிகள் பரக்கத்துல்லா, அப்துல்ரகுமான், பிஸ்மி, அப்துல்கனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராமநாதபுரம் மாவட்டத் தலைவர் சலிமுல்லாகான் வரவேற்று பேசினார்.

கருத்தரங்கில் அமைப்பின் மாநிலத் துணைச் செயலர் கோவை செய்யது, மாநில உலமாக்கள் ஜமாஅத் செயலர் பிஸ்மில்லாகான் பைஜி ஆகியோர் பேசினர்.
குடிப்பழக்கம் மற்றும் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளுக்கு ஆட்படாமல் இருப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மாவட்டத்தில் அரசின் சார்பில் இலவசமாக வழங்கப்படும் திட்டங்களுக்கு ரூ.300 லஞ்சமாக பெறுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மாவட்ட நிர்வாகிகள் சாதிக்பாட்ஷா, தஸ்பீக் அலி, அன்வர்அலி, பஷீர் அஹமது உள்பட பலரும் கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன் பெற்றனர்
No comments:
Post a Comment