TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Wednesday 11 January 2012

புத்தகத் திருவிழாவிற்கு புறப்படுங்கள்...




ஒரு தேசத்தில் புரட்சியை உருவாக்க வேண்டுமெனில் முதலில் ஆயுதங்களை அல்ல; புத்தகங்களை இறக்குமதி செய்ய வேண்டும்.

வீரத்தைத் தட்டியெழுப்புவதற்கு முன்பு அறிவையும், அதுகுறித்த சிந்தனைகளையும் தூண்ட வேண்டும். அதற்கு புத்தகங்கள் வழிகாட்டுகின்றன.

ஆயுதப் புரட்சிகளையும், மக்கள் கிளர்ச்சிகளையும் காகிதப் புரட்சிகள் வழிநடத்தியிருக்கின்றன என்பதை உலக வரலாறுகள் நிரூபித்துள்ளன.

தமிழகத் தலைநகர் சென்னையில் கடந்த 34 வருடங்களாக அறிவொளியைப் பரப்பும் அறப்பணியை தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (ஙிகிறிகிஷிமி) சிறப்பாக செய்து வருகின்றன.

இவ்வருடம் வெற்றிகரமாக 35வது ஆண்டில் சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பச்சையப்பன் கல்லூரிக்கு அருகில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் நடக்கவிருக்கிறது.

ஜனவரி 5 முதல் 17 வரை தினமும் மதியம் 2 மணி முதல் 9 மணி வரையும், விடுமுறை நாட்களில் காலை 11 மணி முதல் 9 மணி வரையும் புத்தகத் திருவிழா நடக்க உள்ளது.

அரசியல் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், அறிவுஜீவிகள், ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டுமே வருகையாளர்களாயிருந்த இத்திருவிழா, கடந்த 10 வருடங்களாக அடித்தட்டு மக்களும் வருகைதரும் முக்கிய வருடாந்திர நிகழ்வாக மாறியிருக்கிறது.

"வாசிக்கும் தலைமுறையையும், யோசிக்கும் தலைவர்களையும் இப்புத்தகத் திருவிழா உருவாக்கி இருக்கிறது என்றால் அது மிகையில்லை. பலர் குடும்பத்துடன் வருகைதரும் ஷாப்பிங் நிகழ்வு போல மாறியிருக்கும் இத்திருவிழாவில் அனைத்துத் துறை நூல்களும், தரமான ஆங்கில வெளியீடுகளும் கிடைக்கின்றன.

அரசியல், இலக்கியம், வரலாறு, தத்துவம், ஆன்மீகம் மட்டுமின்றி மாணவர்களுக்குத் தேவையான பல்துறை நூல்களும் கிடைக்கின்றன.

புத்தகத் திருவிழாவிற்கு வருபவர்கள் குறைந்தது இரண்டு நாட்களை ஒதுக்க வேண்டும். முதல் நாள் சென்று புத்தகக் கடைகளையும், அங்குள்ள புத்தகங்களையும் குறித்துக் கொண்டு, அதன் விலைகளையும் அறிய வேண்டும். அடுத்த நாள் சென்று வாங்க வேண்டும். இதன்மூலம் பரபரப்பு தவிர்க்கப்பட்டு, நாம் விரும்பும் புத்தகங்களை நிதானமாக வாங்க முடியும். குறைந்தது 500 ரூபாயில் தொடங்கி 5000 ரூபாய் வரை புத்தகங்களை வாங்குபவர்களுக்கு இது மிகவும் உதவிகரமாக இருக்கும்.

தமுமுக மற்றும் மமகவைச் சேர்ந்த சகோதரர்கள் இப்புத்தகத் திருவிழாவிற்கு வருகைதந்து தங்களின் வாசிக்கும் அறிவை உயர்த்திக் கொள்ள வேண்டும். மேடைகளில் பேசவும், பயிலரங்குகளில் கருத்துரை வழங்கவும், கட்டுரைகள் எழுதவும் புத்தக வாசிப்பு மிகவும் முக்கியமாகும்.

அந்த வகையில் 600க்கும் மேற்பட்ட புத்தகக் கடைகள் இருக்கும் நிலையில் உங்களின் அலைச்சலையும், தேடலையும், நேரத்தையும் மிச்சப்படுத்தும் வகையில் ஒருசில புத்தக நிறுவனங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.

அங்கு சென்று உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ற புத்தகங்களை நீங்கள் வாங்கலாம். அதேநேரம், நாம் சுட்டிக்காட்டியுள்ள சில கடைகளில் நமக்கு எதிரான புத்தகங்களும் இருக்கக்கூடும். அவற்றை கவனமுடன் தவிர்ப்பது உங்களது கடமையாகும். இவை தவிர விகடன் குழுமம், நக்கீரன், கிழக்கு பதிப்பகம், அம்பேத்கார் நிலையங்கள் என மேலும் பல பதிப்பகங்களும் உள்ளன. அங்கெல்லாம் புத்தகங்களைத் தேர்வு செய்வது உங்களின் கவனத்துடன் கூடிய கடமையாகும்.

1. பாரதி புத்தகாலயம் (F18)
2. அலைகள் (22)
3. பெரியார் சுயமரியாதை (38)
4. ரஹ்மத் பதிப்பகம் (39)
5. NCBH (F53)
6. இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட் (F54)
7. பூவுலகின் நண்பர்கள் (71)
8. தாழையான் பதிப்பகம் (88)
9. சாஜிதா புக் சென்டர் (124)
10. யூனிவர்சல் பப்ளிஷர்ஸ் (168)
11. பீப்புல்ஸ் வாட்ச் (187)
12. எதிர் (221)
13. விடியல் (306)
14. அடையாளம் (322)
15. பொன்னி (387)
16. முரண் (393)
17. பாவை (402)
18. கீழைக்காற்று (404)
19. கறுப்புப் பிரதிகள் (413)
20. இளையான்குடியான் மடல் (436)
21. புலம் (447)

thanks:  Thamimun Ansari

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar