TMMK&MMK
இன்ஷா அல்லாஹ் வரும் டிசம்பர் 6 லால்பேட்டையில் கடலூர் தெற்கு மாவட்டம் சார்பில் லால்பேட்டை கைகாட்டி தபால் நிலையம் முன்பு தமுமுக தலைமையில் கருஞ்சட்டை அணிந்து கண்டன ஆர்பாட்டம்.... சமுதாய சொந்தங்களே! அணிதிரள்வீர் ! அழைக்கிறது… நகர தமுமுக. லால்பேட்டை பெருநகரம்.....

Monday 13 February 2012

குருதிக்கொடை-அல் கோபர் தமுமுக செய்திகள்

கடந்த 2010 ஹஜ் மாதத்தில் ஹாஜிகளுக்கு அவரசகால உதவிக்காக சவூதி அரேபியா கிழக்கு மண்டலத்தில் அல்-கோபர் தமுமுக முதன் முறையாக கிங் ஃபகத் மருத்துவமனையுடன் இணைந்து  மாபெரும் இரத்ததான முகாமை நடத்தியது. அல்-கோபர் தமுமுகவின்
சிறப்பான முன்னேற்பாடுகளுடன் கூடிய இரத்தானத்தை பாராட்டும் வண்ணம்   அல்-கோபர் தமுமுகவிற்கு கிங் ஃபகத் மருத்துவமனை நினைவுக் கேடயத்தை வழங்கியது அனைவரும் அறிந்ததே. இதன் தொடர்ச்சியாக கிங் ஃபகத் மருத்துவமனையின்  வேண்டுகோளுக்கிணங்க 10-02-2012 அன்று அல்-கோபர் தமுமுக தன் மூன்றாம் கட்ட இரத்ததான முகாமை நடத்தியது.


இம்முகாம் மதியம் 1முதல் 5மணிவரை நடைபெற்றது. இம்முகாமில் தம்மாம், ஜூபையில், ரஹிமா, அப்கேக், அல்ஹஸா, சிகாத் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இம்முகாமில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தங்களின் பெயர்களை பதிவு செய்தபோதிலும் நேரமின்மையின் காரணமாக சுமார் 100 நபர்கள் மட்டமே தங்கள் குருதியைக் கொடையளித்தனர். ஆர்வமாக இரத்தம் கொடுக்கவந்து கொடுக்கமுடியாமல் சென்ற மக்களுக்காக இன்ஷாஅல்லா நான்காம் கட்ட இரத்தான முகாம் வரைவில் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
இதில் சிறப்பம்சம் என்னவென்றால் தாயகத்தில் தமுமுகவின் தன்னலமற்ற இரத்தான சேவைகளைக் கண்ட மாற்று மத சகோதரர்கள் தாங்களாகவே முன்வந்து இரத்ததானம் செய்து அனைவரையும் அகமகிழச்செய்தனர்.

இம்முகாம் அல்-கோபர் தமுமுக கிளைத் தலைவர் சகோ.இஸ்மாயில்  தலைமையிலும் துணைத் தலைவர் சகோ. ஷஃபி என்ற பாபு, செயலாளர் சகோ. ஹாஜா பஷிர், பொருளாளர். சகோ. ஷஃபியுல்லா, மக்கள் தொடர்பாளர் ஃபைசர், இணைச்செயலாளர் சகோ.இலியாஸ், துணைச்செயலாளர் சகோ.ஹாஜா ஆகியோர்களின் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் மண்டலத் துணைத்தலைவர் சகோ. அப்துல்காதர், மண்டலச் செயலாளர் சகோ. இஸ்மாயில், மண்டலப் பொருளாளர் சகோ.நஸ்ருதீன்,  துணைச் செயலாளர்கள் சகோ. அப்துல்காதர் ஜக்கரியா, சகோ.அஸ்ரப், சகோ.சீனிதுஹம்மது, இம்தியாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

த.மு.மு.க.வின் பொதுகுழு புகைப்படம் Slideshow: த.மு.மு.க’s trip to Tamil Nadu, India was created by TripAdvisor. See another Tamil Nadu slideshow. Create your own stunning free slideshow from your travel photos.
Photobucket
make avatar