
தமிழக சட்டப்பேரவையில் நடைபெற்ற இவ்வாண்டுக்கான சிறைத்துறை மானியக்கோரிக்கை விவாதத்தில்
கலந்துகொண்டு மனிதநேய மக்கள் கட்சியின் சட்டப்பேரவை தலைவரும் இராமநாதபுரம்
சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான பேராசிரியர் முனைவர் எம்.எஜ்.ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
பத்தாண்டுகளுக்கும் மேலாக சிறைவாடும் அப்பாவி முஸ்லிம்களை அரசு கருணைகொண்டு
சட்டவிதி161ம் பிரிவின் அடிப்படையில் விடுதலை செய்திட வேண்டுமென கோரிக்கை வைத்திருக்கிறார்...
மகிழ்ச்சியான நிகழ்வு... இன்றைக்கு தமிழகத்தின் மத்திய சிறைகளில் நெடுங்காலமாக
தங்கள் வாழ்க்கையின் இனிமைகளை தவறவிட்டு வாடிவரும் அப்பாவிகளின் மீது படிந்துள்ள
தீவிரவாதகறை அகன்றுவரும் இவ்வேளையில் பேராசிரியர் அவர்களின் வாதம் வெகுஜன மக்களின்
கவனத்தை ஈர்த்துள்ளது... முன்னெடுக்க பட்டுவரும் விடுதலை நடவடிக்கைகளுக்கு நல்ல களத்தை
ஏற்படுத்தியுள்ளது...
சட்டப்பேரவையில் பேராசிரியர் அவர்கள் எழுப்பியுள்ள இந்த சரித்திரக்குரல் நிச்சயமாக சிறைவாசிகளின்
விடுதலைக்கு ஒரு மகத்தான விடியலை கொடுக்கும் என்கிற நம்பிக்கை பலமாகி உள்ளது... பேராசிரியர் அவர்களின்
பணிகள் சிறக்க அவர்களின் மூலமாக சமுதாய உரிமைகள் மீட்கபட ஏக இறையவன் அருள்புரிய துஆ செய்வதுடன்...
பேராசிரியர் அவர்களுக்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறேன்...
No comments:
Post a Comment