Wednesday, 18 July 2012
பெரம்பலூரில் அணிதிரண்ட முஸ்லிம் அமைப்புகள்
பெரம்பலூர் மாவட்டம், பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சாகுல் ஹமீது, அரும்பாவூரைச் சேர்ந்த யுரேஷா பேகம் ஆகியோருக்கு இஸ்லாமிய முறைப்படி கடந்த மாதம் 25-ம் தேதி நடைபெறவிருந்த திருமணத்தை மாவட்ட நிர்வாகம் தடுத்து நிறுத்தி ஷரியத் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுவரும் பெரம்பலூர் கலெக்டர் தரேஷ் அஹமது, ஆர்டிஓ ரேவதி மற்றும் சமூக நலத்துறை அலுவலர் பேச்சியம்மாள் ஆகியோரைக் கண்டித்து முஸ்லிம் அமைப்புகளின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் 17.07.12 அன்று பெரம்பலூர் பேருந்து நிலையம் எதிரிலுள்ள நகராட்சி மைதானத்தில் நடைபெற்றது.
அல்கோபர் கிளை சார்பாக நினைவுப்பரிசாக எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு வீர வாள் வழங்கப்பட்டது
தமுமுக-மமக வின் சவுதி அரேபியா கிழக்கு மண்டல சிறப்பு செயற்குழு (பொதுக்கூட்டம்) 13-07-2012 வெள்ளிக்கிழமை தம்மாம். அல்கோபர் கிளை சார்பாக மூத்த தலைவர் எம்.ஹெச்.ஜவாஹிருல்லாஹ்.M.L.A. அவர்களுக்கு அல்கோபர் கிளை சார்பாக கிளை தலைவர் இஸ்மாயில் துணைச் செயலாளர் S.M.J. இலியாஸ் இணைந்து நினைவுப்பரிசாக வீர வாள் வழங்கப்பட்டது.
பேரா. ஜவாஹிருல்லாஹ் பங்கு பெற்ற ஜுபைல் சிறப்புக்கூட்டம்
சவுதி கிழக்கு மாகாணத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ம.ம.க. சட்டப்பேரவை உறுப்பினர் பேரா. ஜவாஹிருல்லாஹ் தனது பயணத்தின் ஒரு அங்கமாக ஜுபைலுக்கு வருகை புரிந்தார். ஜுபைல் மாநகர் கிளை த.மு.மு.க நிர்வாகிகளுடன் 11.07.12 அன்று மாலை கலந்துரையாடினார். பின்னர், ரீகல் உணவத்தின் அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றினார்.
லால்பேட்டையில் எழுச்சியுடன் நடைப்பெற்ற தமுமுக – மமக பொதுக்கூட்டம்

லால்பேட்டை சிதம்பரம் மெயின் ரோட்டில் எஸ்.ஏ.முனவ்வர் உசேன் நினைவரங்கிள் கடந்த சனிக்கிழமையன்று நடைப்பெற்ற தமுமுக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா மமக அரசியல் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு மமக முன்னாள் மாவட்டச் செயலாளர் எஸ்.ஏ.யாசிர் அரஃபாத் தலைமை வகித்தார்.பொதுக்கூட்டத்தில் மாநிலத் தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி,பொதுச் செயலாளர் எம்.தமீமுன் அன்சாரி,மாநில நிர்வாகிகள் ஹாரூண் ரஷீத், நாசர் உமரி உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.
Sunday, 8 July 2012
Tuesday, 3 July 2012
நீடுர் - ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரி நூற்றாண்டு விழா
நாகை மாவட்டம் நீடுர் நெய்வாசலில் உள்ள ஜாமிஆ மிஸ்பாஹீல் ஹீதா அரபிக் கல்லூரியின் நூற்றாண்டு விழா மற்றும் 66ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நீடுரில் அரபிக் கல்லூரி வளாகத்தில் ஜீன் 29 30 மற்றும் ஜீலை 1 2012 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் ஜீன் 30 அன்று நடைபெற்ற "சமுதாய ஒற்றுமை" அரங்கில் பங்குக் கொண்டு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லா ஆற்றிய உரையில்
Subscribe to:
Posts (Atom)
